Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

திபெத்திற்கு சட்டரீதியானதும் அர்த்தமுள்ளதுமான சுயாட்சி வேண்டும்:தலாய் லாமா.

13.03.2009.

திபெத்திற்கு சட்டரீதியானதும் அர்த்தமுள்ளதுமான சுயாட்சியை வழங்குமாறு திபெத்தின் ஆன்மீகத் தலைவர் தலாய் லாமா மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார்.

சீன ஆக்கிரமிப்புக்கெதிரான திபெத்திய கிளர்ச்சியின் 50 ஆவது வருட நினைவை முன்னிட்டு விடுத்த செய்தியிலேயே தலாய்லாமா இவ் அழைப்பை விடுத்துள்ளார்.

திபெத்தில் அச்சமான சூழ்நிலையொன்றை சீனா உருவாக்கி வருவதாக குற்றஞ்சாட்டியுள்ள தலாய்லாமா பரஸ்பர நலன்களின் அடிப்படையில் இருதரப்பும் செயற்பட வேண்டியது அவசியமெனத் தெரிவித்துள்ளார்.

சீன மக்கள் குடியரசு என்ற கட்டமைப்புக்குள் திபெத்தியர்கள் சுதந்திரமாக வாழக்கூடிய ஏற்பாடொன்றின் அடிப்படையில் அமைந்த சட்டரீதியானதும் அர்த்தமுள்ளதுமான சுயாட்சியையே திபெத்தியர்கள் எதிர்பார்க்கிறார்களென லாமா தெரிவித்துள்ளார்.

அத்துடன் திபெத்திற்கு நீதி கிடைக்கும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லையெனவும் லாமா குறிப்பிட்டுள்ளார்.

இதுதவிர திபெத்தின் மதம், கலாசாரம், மொழி மற்றும் தனித்துவ அடையாளம் என்பன அழிவடைந்துவருவதாகவும் திபெத்தியர்களின் வாழ்வாதார சூழ்நிலைகளை அழிப்பதில் சீனா வெற்றி கண்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ள தலாய்லாமா இலட்ச்சக்கணக்கான திபெத்தியர்களை சீனா கொன்றுள்ளதாக மீண்டும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

1959 இல் சீன ஆக்கிரப்புக்கெதிரான திபெத்தியர்களின் புரட்சி தோல்வியடைதத்தைத் தொடர்ந்து தலாய்லாமா திபெத்தை விட்டு வெளியேறி இந்தியாவில் வசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

Exit mobile version