Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை ஊக்கப்படுதவே கருணாவிற்கு அமைச்சர் பதவி : சந்திர நேரு

சிறீ லங்கா பேரினவாத அரசாங்கத்தின் திட்டமிட்ட தந்திரோபாயமான குடியேற்றத் திட்டங்களைக் கிழக்கு மாகாணத்தில் மேற்கொண்டு வருவதனூடாக, தமிழ்ப் பேசும் மக்களின் செறிவைச் சீர்குலைத்து வருவதாக சந்திர நேரு எம்.பி இனியொருவிற்கு வழங்கிய செவ்வியொன்றில் தெரிவித்தார். முன்னைநாள் புலிகள் தளபதிகளில் ஒருவரான கருணா அல்லது வினாயகமூர்த்தி முரளீதரனின் அமைச்சானது கிழக்கு மாகாணத்தில் சிங்களக் குடியேற்றங்களை ஊக்கப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டே அமைக்கப்பட்டது என்று மேலும் தெரிவித்த அவர், போராட்டத்தில் இழைக்கப்பட்ட தவறுகளை விமர்சனக் கண்ணோட்டத்தோடு அணுகுவதன் மூலமே புதிய திட்டங்களை வகுத்துக்கொள்ள முடியும் என்று கருத்து வெளியிட்டார்.
இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதுமே தமிழ் பேசும் மக்களுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளதாகக் கவலை தெரிவித்த அவர், பேரின வாத இலங்கை அரசுடன் எப்போதும் இணைந்து போக முடியாது என்றும் தெரிவித்தார். இறுதி நாள் புலிகள் அரசு மற்றும் ஐக்கிய நாடுகள் அமைப்பு ஆகியவற்றுடனான புலி உறுப்பினர்களின் சரணடைவு குறித்த பேச்சுக்களில் ஈடுபட்ட நேரு அரசியல் காரணங்களால் லண்டனில் தற்காலிகமாகத் தங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version