இலங்கை மக்களின் பெரும் பகுதியினர் அரசிற்கு எதிரான உணர்வுகளைக் கொண்டுள்ள நிலையில் அரசிற்கு எதிரான குறைந்தபட்ச ஜனநாயகப் போராட்டங்களோடு கூட இணைந்துகொள்வதை நிராகரிக்கும் இவர்கள் ராஜபக்சவையும் பாசிச சட்டங்களையும் பலப்படுத்துகிறார்கள்.
இது தொடர்பாக தொடந்து கூறுகையில்,
நாவற்குழியிலுள்ள தேசிய வீடமைப்பு அதிகார சபைக்குச் சொந்தமான காணியில் சிங்களக் குடும்பங்கள் அத்துமீறிக் குடியேறியுள்ளன. இவர்களுக்கான காணிகள் அண்மையில் அளவீடு செய்யப்பட்டுப் பங்கிடப்பட்டுள்ளன.
ஆயினும் சிங்களக் குடும்பங்கள் குடியமர்ந்துள்ள பகுதிக்கு அருகில் உள்ள தமிழ் மக்களை அங்கிருந்து வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அவர்களை சற்றுத் தொலைவில் உள்ள புதுக்குடியேற்றத் திட்டத்தில் தங்கியுள்ள தமிழ் மக்களுடன் இணைப்பதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதேவேளை, சிங்கள மக்களுக்கு காணிகள் வழங்கப்பட்டுள்ள போதும் அங்குள்ள தமிழ் மக்களுக்கு இதுவரை காணிகள் அளவீடு செய்யப்படவில்லை. இதன் காரணமாக தமிழ் மக்கள் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.
இது சட்ட ரீதியான விடயம். ஒரு பகுதியினருக்குக் காணியை அளந்து கொடுத்து விட்டு மற்றைய பகுதியினருக்குக் காணியை அளந்து கொடுக்காமல் இருப்பதே சட்டத்துக்குப் புறம்பான செயல். ஆகவே இது தொடர்பில் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க முடியும் என்று நம்புகின்றேன்.