Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

திட்டமிட்ட குடியேற்றங்கள் நிகழும் என மக்களை மிரட்டிய கொக்காவில் இராணுவம்

இலங்க பேரினவாத அரசின் இனச்சுத்திகரிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக தமிழ்ப் பேசும் மக்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்கள் எங்கும் குடியேற்றங்கள் துரிதகதியில் நடைபெறுகின்றன. இலங்கை அரச துணைக்குழுக்களின் உதவியோடு நடைபெறும் பௌத்த சிங்களமயக்கும் நடவடிக்கை நடைபெற்றுவருகின்றது. அவலத்துள் வாழும் சமூகத்தின் கீழ் நிலையிலுள்ள மக்களின் நிலங்கள் பொதுவாக அபகரிக்கப்படுகின்றன. தமிழ்ப் பேசும் மக்கள் மத்தியிலோ இலங்கையிலோ அரச பாசிசத்திற்கு எதிரான தலைமைகள் ஏதும் காணப்படாத நிலையில் இலங்கை அரசின் திட்டமிட்ட இனச்சுத்திகரிப்பு நடவடிக்கைகள் தங்கு தடையின்றி நடைபெறுகின்றன.
கொக்காவில் இராணுவ முகாம் அதிகாரிகள் கடந்த வாரம் சிவில் சமூகப் பிரதிநிதிகளை அழைத்து ஒன்று கூடல் நிகழ்த்தியிருந்தனர். வன்னிப் பகுதிகளின் வளமான நிலம் தமக்குத் தேவைப்படுவதாகவும். பல சிங்களக் குடியேற்றங்கள் திட்டமிடப்பட்டிருப்பதாகவும் தமக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்டுக்கொண்டனர். சிலர் எதிர்ப்புத் தெரிவிக்க வன்னிப் பெண்களும் தமக்கு பிடித்திருக்கிறது என்று மிரட்டியுள்ளனர்.
இலங்கை அரசின் கொலைவெறியை இந்தியாவும் அமரிக்க ஏகாதிபத்தியமும் அங்கீகரிக்க அரச துணைக்குழுக்களின் துணையோடு மகிந்த குடும்பம்ப அரசு மக்களைத் துவம்சம் செய்து வருகிறது. இவ்வேளையில் இலங்கையில் மக்கள் சார்ந்த மாற்று அரசியல் தலைமையின் தேவை உணரப்படுகிறது.

Exit mobile version