Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

திட்டமிட்டு நடத்தப்படும் கொள்ளை

usdஉலகத்தில் ஒருவீதமான பணக்காரர்கள் உலகம் முழுவதுமுள்ள சொத்துக்களின் ஐம்பது வீதமானவற்றைக் கையகப்படுத்தி வைத்துள்ளனர். முதல் பத்துவீதமான பணக்காரர்கள் உலகத்தின் 87 வீதமான சொத்துக்களின் உரிமையாளார்கள். சாமானிய மக்களான கீழ் நிலையிலுள்ள ஐம்பது வீதமானவர்களிடம் ஒருவீதமான சொத்து மட்டுமே காணப்படுகின்றது. இத்தகவல்களை சுவிஸ் கிரடிட் வங்கி இந்தவாரம் வெளியிட்ட அறிக்கையில் கூறுகிறது

2008 ஆம் ஆண்டில் ஆரம்பித்த பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர் உலகம் புதிதாக ஒழுங்கமைக்கப்பட்டது. பல்தேசிய நிறுவனங்களுக்கும் அதன் பின்புலத்தில் ஒளிந்திருக்கும் உலகின் மிகப்பெரும் பண முதலைகளுக்கும் மேலதிக அதிகாரத்தையும் சுதந்திரத்தையும் வழங்கும் வகையில் உலகம் மறுசீரமைக்கப்பட்டது. முதலாளித்துவப் பொருளாதாரம் இலாபத்தைப் பெருக்குவதை அடிப்படையாகக்கொண்டது.
2008 ஆம் ஆண்டிற்குப் ஏகாதிபத்திய நாடுகள் ஊடாக முதலாளிகளுக்கு வழங்கப்பட்ட அதீத சுதந்திரம் அவர்கள் செலுத்திய குறைந்தபட்ச வரியையும் செலுத்தத் தேவையற்றவர்களாக்கிற்று. உழைக்கும் மக்களிடமிருந்தும், வறியவர்களிடமிருந்தும் அதிக வரியையும் வட்டியையும் அறவிடும் அமைப்பு முறை தோன்றியது.

உலக வங்கி, உலக நாணய நிதியம், உலக வர்த்தக மையம் போன்றன பெரு முதலாளிகளின் இலாபத்தை இரட்டிப்பாக்கும் வகையிலான பொறிமுறைகளை உருவாக்கின. மூன்றாமுலக வறிய நாடுகளை மேலும் சுரண்டி காலனி அடிமைத்தனத்தை மீண்டும் தொடங்குவதற்கான திட்டங்கள் அதிவேகத்தில் செயற்படுத்தப்பட்டன.

2013 ஆம் ஆண்டின் மத்திய பகுதிக்கும் 2014 ஆம் ஆண்டின் மத்திய பகுதிக்கும் இடையேயான ஒரு வருட காலத்தில் உலகின் செல்வம் 8.3 வீதத்தால் அதிகரித்து மொத்தத் தொகையாக 263 ரில்லியன் டொலர்களாகியுள்ளது என்று சுவிஸ் கிரடிட் பாங் இன் அறிக்கை கூறுகிறது.
செல்வச் செழிப்பின் அதிகரிப்பு என இங்கு குறிப்பிடப்படுவதும் பணக்காரர்கள் சேர்த்துக்கொண்ட சொத்துக்களையே.

எதிர்வரும் ஓராண்டில் இது மேலும் அதிகரிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 2008 உலகப் பொருளாதார நெருக்கடியின் போது உருவாக்கப்பட்ட்ட அரச பொறிமுறையே மூலதனத்தஒ ஒரு இடத்தில் குவிக்கிறது.
உலகம் முழுவதும் தமது வாழ்க்கைக்காக மக்கள் போராடுவதைத் தவிர வேறு வழிகளில்லை என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இதனால் உலகம் இராணுவ மயப்படுத்தப்படுகின்றது.

Exit mobile version