Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

திட்டமிட்டவாறு கவனயீர்ப்புப் போராட்டம் முல்லைத்தீவில் இடம்பெறும்

முல்லைத்தீவு மாவட்டம் கேப்பாபிலவு கிராம மக்களை சொந்த இடங்களில் மீள்குடியமர்த்தக் கோரி எதிர்வரும் வெள்ளிக்கிழமை(21-09-2012) அன்று நண்பகல் 12.00 மணி தொடக்கம் 2.00 மணி வரை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினராகிய எம்மால் நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கவனயீர்ப்புப் போராட்டம் திட்டமிட்டபடி இடம்பெறும்.
ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழு அதிகாரிகள் இலங்கையில் தங்கியுள்ள நிலையில் அவர்களதும் சர்வ தேச சமூகத்தினதும் கவனத்தை ஈர்க்கும் வகையில் கேப்பாபிலவு மக்களது மீள்குடியமர்வு மற்றும் இராணுவ வெளியேற்றத்தினை வலியுறுத்தியும், பௌத்தமயமாக்கல், சிங்களக் குடியேற்றஙகள் என்பவற்றிக்கு எதிராகவும் மேற்கொள்ளப்படவுள்ள இப்போராட்டம் திட்டமிட்டவாறு மேற்கொள்ளப்படும்.
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தான் விஜயம் செய்தபின்னர்இ இலங்கை தொடர்பான தனது எதிர்மறையான எண்ணத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக பொதுநலவாய நாடாளுமன்ற சங்கத்தின் பொதுச்செயலாளர் கலாநிதி வில்லியம் எவ். ஷிஜா கடந்தவாரம் கூறியுள்ள நிலையில் தமிழ் மக்கள் படும் அவல நிலையினையும் இங்குள்ள உண்மை நிலையினையும் நாம் சர்வதேச சமூகத்திற்கு உணர்த்த வேண்டிய கட்டயநிலையில் உள்ளோம். எமது அவல நிலைகளை வெளி உலகிற்கு கொண்டுவர உதவும் இத்தகைய போராட்டங்களின் உண்மையான வெற்றி என்பது பாரிய அளவிலான மக்களின் பங்குபற்றலிலேயே தங்கியுள்ளது. எனவே இப்போராட்டத்தில் அனைத்துக் கட்சிகளையும் பொது அமைப்புக்கள் மற்றும் பொதுமக்களையும் கலந்துகொண்டு உலகுக்கு உண்மையை வெளிக்கொணரும் இவ்ஐனநாயகப் போராட்டத்தை வெற்றிபெறச் செய்ய அனைவரையும் பெருமளவில் அணிதிரளுமாறு அன்போடும் உரிமையோடும் வேண்டுகின்றோம்.
இடம்:- முல்லைத்தீவு அரசாங்க அதிபர் பணிமனை முன்பாக
நேரம்:- நண்பகல் 12.00 மணி
திகதி:- 21-09-2012

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் செ.கNஐந்திரன்
தலைவர் பொதுச் செயலாளர்

Exit mobile version