மேலும் இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு இராணுவத் தளபதியாக பதவி வகிக்கும் எதிர்பார்ப்பிலிருந்த ஜெனரல் சரத் பொன்சேக்கா, திடீர் ஓய்வு அறிப்பினால் மிகவும் கவலையடைந்திருப்பதாக இராணுவத்தின் சிரேஸ்ட அதிகாரியொருவர் தகவலளித்தார்.
பாதுகாப்புச் சபையின் தலைவர் பதவியை பொறுப்பேற்றுக் கொள்ள முடியுமா, முடியாதா? என்று தீர்மானிப்பதற்கு சரத் பொன்சேக்காவிற்கு ஒரு மணிநேர கால அவகாசமே வழங்கப்பட்டதாகவும் அந்த அதிகாரி மேலும் குறிப்பிட்டார்.
இதனால், இராணுவத் தளபதியுடன் நெருக்கமாக செயற்பட்டு, விடுதலைப் புலிகளுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்ட ஏராளமான இராணுவ அதிகாரிகளும் ஏமாற்றமடைந்துள்ளதாகத் தெரியவருகின்றது.
சரத் பொன்சேக்கா, பாதுகாப்புச் சபையின் தலைவராக பதவி உயர்த்தப்பட்டுள்ளார் என, அரசாங்கத்தின் ஆலோசனைகளுக்கமைய ஊடகங்கள் பிரசாரம் செய்து வந்தாலும், அந்தப் பதவி எந்தவித செயற்திறனுமற்ற ஒன்றென்பதே சரத் பொன்சேக்காவின் கருத்தாக உள்ளதென எமக்குத் தகவலளித்த அந்த அதிகாரி மேலும் கூறினார்.