இது குறித்துப் பலரும் தமது கடும் அதிருப்தியை பதிவு செய்ததுடன், டெல்லியில் பாலியல் வன்முறைகள் அதிகரித்து விட்டதாகவும், குறித்த பெண்ணை குழுவாக கற்பழித்தவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தனர் .
சோனியா காந்தி நேற்றிரவு மருத்துவமனைக்கு நேரில் சென்று விசாரித்தார்.
பாதிக்கப்பட்ட மாணவியின் உடல்நிலை தற்போது மோசமான நிலையில் இருப்பதாகவும், அவருக்கு சுவாசக் கருவிகள் பொருத்தப்பட்ட நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
சுமார் இருபது நிமிடங்கள் மருத்துவமனையில் இருந்த சோனியா காந்தி அந்த மாணவியின் பெற்றோரையும் சந்தித்துப் பேசினார்.
அவர் டெல்லி முதல் அமைச்சர் ஷீலா தீட்சித்துக்கு எழுதிய கடிதத்தில், நமது தாய், பிள்ளைகள், சகோதரிகளுக்கு பாதுகாப்பு இல்லை என குறிப்பிட்டுள்ளார்.
மிகுந்த வலியை தந்துள்ள இந்த சம்பவத்தால் அவமானம் ஏற்பட்டுவிட்டதாக கூறி கடுமையான சட்ட நடவடிக்கையை எடுக்க வலியுறுத்தியுள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டேக்கு எழுதிய கடிதத்தில், நாட்டில் நகரங்களில் உள்ள பாதுகாப்பின்மை அனைவருக்கும் அவமானம் தரக்கூடியதாக உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இந்த குற்றம் உலகளாவிய கண்டனத்திற்குரியது. அரசாங்கத்தின் அவசர கவனத்திற்கான அவசியத்தை ஏற்படுத்திவிட்டது என்றும் அதில் தெரிவித்துள்ளார்.
போலீஸ் மற்றும் பிற காவல் படையினர், நமது மகள்கள், சகோதரிகள், தாய்மார்கள் ஒவ்வொரு நாளும் சந்திக்கின்ற ஆபத்தை ௦உணர வேண்டும் என்று கூறியுள்ளார்.
இந்தியாவின் மூடிய பழமைவாதக் இந்துத்துவா கலாச்சாரம் தன்னளவிலேயே வன்முறையானது. பாலியல் வல்லுறவு குறித்துப் பேசுவதே தவறானது என மூடிவைக்கும் ஆணாதிக்கவாதமும், அதன் பெண்கள் மீதான வன்முறையும் ஒரு பெண்ணின் மீதான வன்முறையாக வெளிப்பட்டுள்ளது.
இதனிடையே தனது ஆட்சியே பெண்களுக்குப் பாதுகாப்பற்றது என சோனியா ஒப்புதல் வாக்குமூலம் வழங்கியிருக்கிறார்