தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்துக்கு காவிரியில் 2.44 டிஎம்சி தண்ணீர் திறந்து விட உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், நேற்று முன்தினத்தில் இருந்து கர்நாடக அரசு தண்ணீர் திறந்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாய அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதைத் தொடர்ந்து கேஆர்எஸ் அணைக்கட்டை ஒட்டியுள்ள பிருந்தாவன் பூங்காவில் சுற்றுலா பயணிகள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
அணையை சுற்றி போடப்பட்டுள்ள 144 தடை உத்தரவு மேலும் 3 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 300 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தடை உத்தரவை மீறி போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு எச்சரித்துள்ளது. காவிரி பாதுகாப்பு கமிட்டி தலைவர் மாதே கவுடா, மாநில நலனை காக்க தவறிய முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தினார்.
நிலவும் சமூகக் கட்டமைப்பு மக்களின் தேவைகளைப் பூர்த்திசெய்ய முடியாத நிலையில் அதிகார வர்க்கம் மக்கள் கூட்டங்களிடையே முரண்பாடுகளைத் தூண்டிவிட முயற்சிக்கின்றது. மத அடிப்படைவாதிகள், இனவாதிகள், சாதி வெறியர்கள் போன்றோரின் ஆதிக்கம் அதிகாரவர்க்கத்தின் துணையோடு திட்டமிட்டு வளர்த்தெடுக்கப்படுகின்றது.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புபடி, தவிர்க்கமுடியாமல் தமிழகத்திற்கு காவிரி தண்ணீரை திறந்துவிட்டுள்ளோம். இந்த முடிவை மகிழ்ச்சியாக எடுக்கவில்லை. கனத்த இதயத்துடன் இந்த முடிவை எடுத்தேன். வழக்குரைஞர்களின் ஆலோசனையின்பேரில், சட்டரீதியான நிர்பந்தம் இருப்பதால், தண்ணீர்திறந்துவிட நேர்ந்தது. இதற்கு வேறுகாரணங்கள் எதுவும் இல்லை என்று முதல்வர் ஜெகதீஷ்ஷெட்டர் தெரிவித்தார்.
கர்நாடக உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பின்படி, உள்ளாட்சி தேர்தலை தற்போதைக்கு நடத்தக்கூடாது என்பது மாநில அரசின் நோக்கம். 2011-ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி உள்ளாட்சி தேர்தல்களில் போட்டியிடும் தொகுதிகளின் இடஒதுக்கீடு அமைக்கப்பட்டால், பிற்படுத்தப்பட்ட,தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களின் சமூகநீதி நிலைநாட்டப்படும். இந்த காரணத்திற்காகதான் உள்ளாட்சி தேர்தலை தள்ளிப்போட அரசு நினைக்கிறதே அல்லாமல் வேறுகாரணங்கள் இல்லை.