இலங்கையின் புகழ்பெற்ற இயக்குனர் அசோக ஹந்தகமவின் உதவி இயக்குனரும் இனியவன் திரைப்படத்தின் உதவி இயக்குனருமாகிய வதீஸ் வருணன் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் குறும்படம்தான் தவறிப் பிறந்த தரளம்.
இலங்கையின் வடக்கில் 2009 யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் மீளக்குடியமர்வுகள் இடம்பெற்றது. யுத்தகாலத்தில் நிகழ்ந்த சிறுவயதுத் திருமணங்கள் ஆயிரக்கணக்க சிறுவர்களை இந்தப் பிரதேசங்களில் உருவாக்கியிருந்தது. போர் இவர்களின் பெரும்பாலானோரை உளவியல் ரீதியாக பாதித்திருந்தது மட்டுமல்லாது மீளக்குடியேறிய பின்னரும் அதன் தாக்கத்திலிருந்து பெரும்பாலான சிறுவர்கள் மீண்டுவராத நிலையும் காணப்படுகின்றது. அப்படியான சிறுவயதுத்திருமணம் மூலம் பிறந்த சிறுவன் போரின் உளவியல் தாக்கங்களுடன் பெற்றோருடன் வாழ்ந்து வருகின்றான். அந்தச் சிறுவனின் பெற்றோருக்கிடையில் ஏற்படும் பிரச்சனைகள் அவனை மேலும் எவ்வாறு பாதிக்கின்றது அதிலிருந்து விடுபட அவன் எவ்வாறு முயற்சி செய்கின்றான் என்பதை ‘தவறிப் பிறந்த தரளம்’ குறும்படன் கூற முயற்சி செய்கின்றது.
அதேவேளை இந்தக் குறும்படம் ஜப்பானில் கடந்த வருடம் நவம்பர் மாதம் இடம்பெற்ற ப்லிம்ஏசியா
இக்குறும்படத்தில் தர்மலிங்கம், பிரியா, பிரகாஸ், தனுசியா, நில்ருக்ஷன் சுலக்ஷன் ஆகியோரும் நடித்திருக்கின்றனர்.
இந்தக் குறும்படத்தினை வதீஸ் வருணன் எழுதி இயக்கியிருப்பதோடு ஒளிப்பதிவினை சமந்த தஸநாயக்க என்னும் முன்னணி சிங்கள ஒளிப்பதிவாளர் மேற்கொண்டிருக்கின்றார். படத்தொகுப்பினை சசங்க சஞ்சீவ அபேகோன் மேற் கொண்டிருக்கின்றார். இக்குறும்படம் யாழ்ப்பாணத்தில் படமாக்கப்பட்டிருப்பதோடு வதீஸ் வருணன் தனது சகோதரருடன் இணைந்து இப்படத்தினை தயாரித்துள்ளார்.