வவுனியா கோமரசங்குளம் மகாவித்தியாலய மாணவியாகிய யதுர்சினி இந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள கல்விப் பொதுத்தராதரத் தேர்வு எழுதவுள்ளார்.
அண்மைக்காலமாக வடமாகாணத்தில் இடம்பெற்று வரும் இராணுவ சுற்றி வளைப்புகள், தேடுதல்களின்போது, பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் பெண்கள் அதிக அளவில் கைது செய்யப்படுவதைப் பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பு என்ற அமைப்பு கண்டனம் வெளியிட்ட அன்றைய தினம் இரவு வவுனியாவில் இந்தப் பெண்கள் இருவரும் கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள்.
சிறுவர்களைப் பாதுகாப்பதாகக் கூறிக்கொள்ளும் ஏகாதிபத்திய நிர்வாக அமைப்பான ஐ,நாவின் யுனிசெப் நிறுவனமோ அன்றி மனித் உரிமை அமைப்புக்களோ அறிக்கைகளை மட்டுமே எழுதிவிட்டு மகிந்த அரசோடு இணைந்து செயற்படுவார்கள். புலம் பெயர் தமிழ் அமைப்புக்கள் மீதும், தென்னிந்தியாவிலிருந்து தமிழீழம் பெற்றுத்தருவதாகக் கூறும் அரசியல் வியாபாரிகள் மீதும் மக்கள் நம்பிக்கை வைக்காமல் தமக்கான போராட்டத்தைத் தாமே உருவாக்கவேண்டும். அவ்வாறான போராட்டத்தைத் தடுப்பதற்காகவே ஏகாதிபத்தியங்கள் புலம்பெயர் மற்றும் தென்னிந்தியக் கைக்கூலிகளின் ஊடாகப் போலி நம்பிக்கைகளை வழங்கி வருகின்றது.
மகிந்த ராஜபக்ச அரசைப் பலவீனப்படுத்தவும், சுய நிர்ணைய உரிமைக்காகப் போராடவும் மக்கள் தம்மைத் தயார்படுத்திக்கொள்ள வேண்டும். புதிய புதிய புரட்சிகரத் அரசியல் தலைமை மக்கள் மத்தியிலிருந்து தோன்றத் தாமதமானால் இன்னும் சில வருடங்கள் வடக்கிலும் கிழக்கிலும் தமிழர்கள் வாழ்ந்தார்கள் என்று பாடப்புத்தகங்களின் மட்டுமே படிக்கும் நிலை ஏற்படும்.புலிகள் இயக்கம் இனிமேல் இல்லை என்றும் மக்கள் மத்தியிலிருந்தே போராட்டங்கள் தோன்ற வேண்டும் என்றும் கூறி புதிய மக்கள் சார்ந்த அரசியலை முன்வைத்து உலகிலுள்ள ஜனநாயக முற்போக்கு சக்திகளின் ஆதரவைத் திரட்டாமால் ராஜபக்ச அரசின் நோக்கங்களுக்கு ஆதரவாக புலம்பெயர் அரசியல் தலைமைகள் நடந்துகொள்கின்றன.
கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் ஜெயக்குமாரி என்ற பெண்ணும், அவருடைய 14 வயதான மகள் விபூசிக்காவும் சில வாரங்களுக்கு முன்னர் படையினரால் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இவ்விரு பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். மக்களை அச்சுறுத்துவதற்காகவும் அவர்கள் மீது உளவியல் யுத்ததை நடத்துவதற்காகவும் இலங்கை அரசு பெண்களைக் குறிவைத்துத் தாக்குதல்களை நடத்திவருகிறது.