Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தலைமைத்துவப் பயிற்சியில் கலந்துகொண்ட மாணவி மரணம்

புதிதாக பல்கலைக்கழக வாய்ப்பைப் பெற்ற மாணவர்களுக்காக இலங்கை அரசாங்கம் வழங்கிய தலைமைத்துவப் பயிற்சியின் போது நோய்வாய்ப்புற்ற மாணவியொருவர் பதுளை வைத்தியசாலையில் மரணமடைந்துள்ளார்.
தியத்தலாவை இராணுவ முகாமில் பயிற்சி பெற்றுக் கொண்டிருந்த நிஷாந்தி மதுஷானி எனும் மாணவியே இவ்வாறு மரணமடைந்துள்ளார். முதலாம் கட்ட தலைமைத்துவப் பயிற்சியில் கலந்துகொண்ட இவர் ஜூன் மாதம் 29ம் திகதி சுகவீனமுற்று பதுளை வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
வெலிமடை, தென்னகோன்வெல பிரதேசத்தில் வசித்துவந்த இருபது வயதான மாணவி நிஷாந்தி, மூவரைக் கொண்ட குடும்பத்தின் இளையவர் ஆவார்.
– எம்.ரிஷான் ஷெரீப்

Exit mobile version