Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தலைமைச் செயலக தீவிபத்து : விசாரிக்க உத்தரவு

மும்பை தலைமைச்செயலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் பலியாகி உள்ளனர். அவர்களில் ஒருவரது உடலை இதுவரை அடையாளம் காணமுடியவில்லை. மேலும் ஏராளமானவர்களைக் காணவில்லை என்று கூறப்படுகிறது. அவர்களைத் தேடும் பணியை மீட்புக் குழுவினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.
தீவிபத்து ஏற்பட்டபோது தலைமைச்செயலகத்தில் இருந்து 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். தற்போது கட்டடத்தை குளிர்விக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதற்கு 48 மணி நேரம் ஆகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீவிபத்து குறித்த குற்றப்பிரிவு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக முதல்வர் தெரிவித்தார். இன்று காலையில் முதல்வர் பிருதிவ்ராஜ் சவான் தலைமையில்அமைச்சரவைக்கூட்டம் நடந்தது. இதில்தலைமைச்செயலகத்தில் நடந்த தீவிபத்து குறித்தும் அங்கு முக்கிய பைல்கள் கருகியது குறித்தும் விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் தீவிப்து குறித்துகுற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி அறிக்கை தரும் படி உத்தரவிடப்பட்டது. மேலும் பலியான 3 பேரும் விபத்தில் பலியானதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Exit mobile version