1957 ஆம் ஆண்டு பிறந்த ஒசாமா பின்லாடன் அமரிக்க அரசால் பயிற்றுவிக்கப்பட்ட தலிபான் இயக்கத்தின் தலைவர்களில் ஒருவர். 2011 ஆம் ஆண்டு மே மாதம் பின் லாடன் அமரிக்க அரசால் பாகிஸ்தானில் கொல்லப்பட்டார்.
1980 களில் அமரிக்க அரசு தலிபானை உருவாக்கியது. ஆப்கானிஸ்தானின் தேசிய இன முரண்பாடுகளையும், ரஷ்ய ஆக்கிரமிப்பையும், பெரும் பணமுதலைகளுக்கு எதிரன வெறுப்புணர்வையும் பயன்படுத்திக்கொண்டு தலிபன்களை இஸ்லாமிய அடிப்படைவாதிகளாக வளர்த்தது.
இந்திய அரசு ஈழப் போராட்ட இயக்கங்களுக்குப் பயிற்சி வழங்கியதைப் போன்றே அமரிக்க அரசு சிறிய எதிர்ப்புக் குழுவான தலிபான்களுக்குப் பயிற்சி வழங்கியது. தலிபான்களுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் மேற்கொண்டது.
கீழ்வரும் காணொளியில் தலிபான் போரளிகளை அமரிக்க அதிபர் ரொனால்ட் ரீகன் சந்திப்பதையும், அவர்களுக்காகப் பிரச்சாரம் மேற்கொள்வதையும் காணலாம்.
ரஷ்யப்படைகள் வெளியேறிய பின்னர் தலிபான்களுக்கு எதிராக அமரிக்கா திரும்பியது. தலிபான்களைக் காரணம்காட்டியே ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்தது. தனது நேட்டோ துணைப்படைகளோடு தலிபான்களை அழிப்பதாக ஆயிரக்கணக்கான அப்பாவிகளைக் கொன்றொழித்தது.
ஒசாமா பின்லாடனின் உத்தரவிலேயே 2001 ஆம் ஆண்டு நடைபெற்ற இரட்டைக்கோபுரத் தாக்குதல் நடைபெற்றதாக அமரிக்க அரசு அறிவித்தது. ஒசாமாவைத் தேடுவதாக மத்தியகிழக்கு நாடுகளை ஆக்கிரமிதத்தது.
இரட்டக் கோபுரத் தாகுதல் அமரிக்க அரசே திட்டமிட்டு மேற்கொண்டதாக ஆதரபூர்வமாக நிறுவப்பட்ட போதும் ஒசாமா குழு மறுத்து அறிக்கை வெளியிடவில்லை. ஆக, 2001 ஆம் ஆண்டு வரையாவது அமரிக்க உளவுத்துறையின் கையாளாகவே ஒசாமா பின்லாடன் இருந்திருக்கலாம் என ஊகங்கள் தெரிவிக்கின்றன.
பின்னதாக அமரிக்கவிற்காவோடு முரண்பட்டுக்கொண்ட ஒசாமாவை பாக்கிஸ்தான் எலைக்குள் அத்துமீறிய அமரிக்கப்படைகள் தடையங்கள் விசாரணைகள் இன்றி அழித்தன.
அன்னிய நாடுகளும் ஏகாதிபத்தியங்களும் உருவாக்கிய நியாயமான தமிழ்ப்பேசும் மக்களின் போரட்டத்தையும் அவர்களே அழித்தனர்.
இன்று அதன் புதிய பகுதி ஆரம்பமாகிவிட்டது. மிகவும் இலகுவாகவே புலம்பெயர் நாடுகளிலுள்ள தமிழர்களை அடியாட்களாக மாற்றிய அமரிக்க அரசும் அதன் துணை நாடுகளும் அழிப்பதற்காக அவர்களைப் பயன்படுத்துகிறது. இவர்களின் தலைமையில் அமரிக்கா மேற்கொண்டுள்ள அரசியல் முள்ளிவாய்க்கால் இன்னும் சிலவருடங்களில் பேரழிவுகளை ஏற்படுத்தவல்லது.