அருப்புக்கோட்டை அருகே உள்ளது கஞ்ச நாயக்கன்பட்டி கிராமம். இங்கு தலித் மக்கள் ,கடந்த வியாழனன்று மாரியம்மன் மற்றும் காளியம்மன் கோவிலுக்கு பொங்கல் வைத்து வழிபட்டனர். அதன் ஒரு பகுதியாக முளைப்பாரி ஊர்வலம் செல்வதற்காக பொதுப் பாதையில் மின் விளக்குகள் கட்டினர். இதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும்இ தலித் மக்கள் கட்டிய அலங்கார வளைவையும் அகற்றியதாகத் தெரிகிறது.
இதனிடையே வெள்ளியன்று தலித் மக்கள் அப்பகுதியில் முளைப்பாரி ஊர்வலம் சென்ற போதும் எதிர்ப்பு தெரிவித்ததால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 5 பேர் காயமடைந்து அருப்புக் கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். படுகாயமுற்ற இருவர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மோத லையொட்டி போலீசார் குவிக் கப்பட்டு , நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த சம்பவத்திற்காக தலித் மக்கள் 12 பேர் உள்ளிட்டு 20பேரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் மோதலுக்கு பின் அக்கிராமத்தின் இரு தரப்பினர் வீடுகளிலும் மின்சார பல்புகள் , மழை நீர் குழாய்களை போலீசார் உடைத்துள்ளனர். பெண்கள் மீதும் லத்திகளால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். திருவிழாவிற்கு தலித் மக்கள் முன்கூட்டியே பாது காப்பு கேட்டும் , போலீசார் தீபாவளியை காரணம்காட்டி செல்லவில்லை என்பதே மோதலுக்கு காரணம் என பொதுமக்கள் தெரிவிக் கின்றனர்.