திண்டுக்கல் மாவட்டம் மேலக்கோயில்பட்டி கிராமத்தைச் சேர்ந்த தலித் இளை ஞர் சடையாண்டி (24). ‘கடந்த 7ம் தேதியன்று மேலக் கோயில்பட்டி கிராமத்தில் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது சாதி ஆதிக்க வெறியர்கள் நான்கைந்து பேர் ஒன்றாக சேர்ந்து கொண்டு வழிமறித்துள்ளனர்.
‘இந்த தெருவில் செருப்பு போட்டுக்கொண்டு நடக்கக் கூடாது என சொல்லியும் திமிராக செருப்புக்காலுடன் நடக்கிறாயா’ எனக் கேட்டுள்ளனர். இதற்கு பதில் சொல்லாமல் சென்றதால் ஆத்திரப்பட்டு ஜாதிப் பேரைச் சொல்லி திட்டி மடக்கியுள்ளனர்.
ஆரோக்கியசாமி உள் ளிட்ட 7 பேர் கொண்ட அந்த கும்பலில் இருந்த இரண்டுபேர் இவரை பிடித்துக்கொண்டு, வாயைத் திறந்து மனித மலத்தை வலுக்கட்டாயமாக திணித்துள்ளனர். முகத்திலும் அசிங்கப்படுத்தியுள்ளனர்’.
சம்பவத்தின் போது அங்கிருந்த சிலர் இவரைக் காப்பாற்றி மருத்துவமனை யில் சேர்த்துள்ளனர். பின்னர் இதுகுறித்து போலீசில் இவர் புகார் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து போலீசார் இப்புகாரின் பேரில் ஆரோக்கியசாமி உட்பட 20 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். யாரும் உடனடியாக கைது செய்யப்பட வில்லை.
இதற்கிடையே, சடையாண்டியை அடித்ததாகக் கூறப்படும் இளைஞர் தரப்பிலும் போலீசில் புகார் தரப்பட்டுள்ளது.
அதில், ‘சடையாண்டி குடித்துவிட்டு வந்து தகராறு செய்தார்’ என்று கூறப் பட்டுள்ளது.