Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தற்கொலை செய்து கொண்ட சீமான்பிள்ளையின் பெற்றாருக்கு விசா மறுப்பு

leoகடந்தவாரம் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்படலாம் என்ற அச்சத்தில் லியோ சீமான்பிள்ளை என்ற மன்னாரைச் சேர்ந்த தமிழ் அகதி தற்கொலை செய்துகொண்டமை அ. இவரின் தாய் தந்தையர் தமிழ் நாட்டில் வாழ்கின்றனர். சீமன்பிள்ளையின் பெற்றோர் அவுஸ்திரேலியா சென்று சீமான்பிள்ளையின் மரணச்சடங்கில் கலந்துகொள்வதற்கு அந்த நாட்டின் அரசு அனுமதி மறுத்துள்ளது.

அதே வேளை தமிழ் அகதிகளைச் சிறைப்பிடித்து குற்றவாளிகள் போல நடத்தும் தமிழ் நாட்டிற்கு சீமான்பிள்ளையின் உடலைக் கொண்டுசெல்வது பாதுகாப்பு அச்சுறுத்தல்களை ஏற்படுத்தும் என சீமான்பிள்ளையின் தாய் தந்தையர் தெரிவிக்கின்றனர். அகதிகளை வைத்து அரசியல் நடத்தும் அவுஸ்திரேலிய அரசு பல உயிர்களோடு விளையாடுகிறது.

சீமான்பிள்ளை வாழ்ந்த மன்னார் இன்று செல்வம் கொழிக்கும் பிரதேசம். வேந்தாந்த என்ற பிரித்தானிய நிறுவனமும் டோட்டல் என்ற பிரஞ்சு நிறுவனமும் மன்னார்க் கடற்பகுதியில் பெற்றோலை அகழ்ந்து செல்கின்றன.

இந்த நாடுகளால் தஞ்சம் மறுக்கப்பட்ட சீமான்பிள்ளை பெற்றோல் ஊற்றித் தற்கொலை செய்துகொண்டார்.

இலங்கையைச் ஒட்டச் சுரண்டி தேசிய இன ஒடுக்குமுறைக்கும் இனக்கொலைக்கும் பின்னணியில் செயற்படும் இப் பல்தேசிய வியாபார நிறுவனங்களுக்கு எதிராக உலகம் முழுவதும் பெரும்பான்மையானவர்கள் இணைந்து செயற்படுகிறார்கள். தமிழ்ப் பேசும் மக்களும் இவ்வாறான ஜனநாயக முற்போக்கு சக்திகளுடன் இணைந்து செயற்படுவதன் ஊடாகவே இன்றைய அழிவுகளை மட்டுப்படுத்த முடியும்.

Exit mobile version