அவுஸ்திரேலியாவில் தற்கொலை செய்துகொண்ட லியோ சீமான்பிள்ளையின் மரணச்சடங்குகள் கூட நடத்தப்பட முடியாத நிலையிலுள்ளது. பெரும் போராட்டத்தின் பின்னர் அவுஸ்திரேலிய அரசு லியோவின் தந்தைக்கு விசா அனுமதி வழங்கியிருந்தது. ஆயினும் லியோவின் தந்தை இந்தியாவில் 24 வருடங்களாக வசித்துவருவதால் இலங்கைக் கடவுச்சீட்டை வைத்திருக்கவில்லை. இந்தியா இலங்கை அகதிகளுக்கு எந்த வகையான சட்டரீதியான அனுமதிகளும் வழங்காத காரணத்தால் அவரிடம் இந்தியக் கடவுச்சீட்டும் இல்லை. இதனால் அவர் அவுஸ்திரேலியா செல்லமுடியாத நிலையில் உள்ளார். லியோவின் உடலை இந்தியாவிற்கு அனுப்புவதற்கும் அவுஸ்திரேலிய அரசு தயாராக உள்ளது. தமிழ் நாடு அரசு உடலை ஏற்றுக்கொள்வதற்கு மறுத்துள்ளது.
ஈழம் பிடித்துத் தருகிறோம் எனத் தமிழ் இனவாத வியாபாரிகளுடன் இணைந்து ஈழ மக்களின் இரத்தத்தின் மேல் போலி நாடகம் நடத்தும் ஜெயலலிதா சாதாரண மனிதாபிமானப் பிரச்சனைக்குக் கூட உதவ மறுக்கிறார். இதனைக் கண்டும் காணாதது போல புலம்பெயர் பிழைப்பு வாதிகளும் தமிழக உணர்வாளர்களும் திடீரெனக் காணாமல் போய்விட்ட்டனர். தமிழ் அகதிகளுக்கான போராட்டக் குழு மனித உரிமை அமைப்புக்களுடன் தொடர்பு கொண்டுள்ளது.
28.06.2014 அன்று கிங்ஸ்டன் பகுதியில் தமிழ் அகதிகளுக்கான போராட்டக் குழு பொதுக்கூட்டம் ஒன்றை ஒழுங்கு செய்துள்ளது.
Shiraz Mirza Community Hall-நோர்பிட்டன் ரயில் நிலையத்திற்கு வலது புறத்தில்-, 76A Coombe Road, Norbiton, Kingston Upon Thames. KT2 7AZ.
நேரம் மாலை 5:30 முதல் 8:30 வரை