Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தற்கொலைத் தாக்குதலில் காயமடைந்தவர்கள் : புதிய சந்தேகங்கள்

முல்லைத்தீவு விஸ்வமடு பிரதேசத்தில் கடந்த 9 ஆம் திகதி இடம்பெற்ற குண்டு வெடிப்பில் காயமடைந்தவர்கள் குருணாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பெயர் விபரங்கள் வெளியாகியுள்ளன. சிறுவர்கள் உள்ளிட்ட 29 பேர் குருணாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நகுலன் (06)
செல்லகுமாரா (01)
கொஞ்சி (07)
சுந்தரன் (18)
நடராஜா (43)
ரி.ராகவன் (16)
கந்தசாமி (வயது வெளியாகவில்லை) ஆகிய சிறுவர்கள் உட்பட ஆண்களும்,
பரீடா (15)
எம்.மகேஸ்வரி (23)
எஸ்.கே.சந்திரா (32)
பபித் (61)
வீ.சிவமாலி (50)
எம்.ரொஷானா (33)
ருவனி அனீனா (26)
ஆர்.எஸ்.வள்ளியம்மா (30)
ராஜேஸ்வரி (49)
ததிஞ்சனி (16)
சீ.திவ்யா (18)
சாந்தி ராமன் (50)
பீ.மகேஸ்வரி (54)
ஏ.ராதிகா (15)
எஸ்.தர்ஷலா (16)
ராமேஸ்வரி (61)
சீ.யோகேஸ்வரி (18)
ஆர்.தேவி (36)
கே.பிரியங்கா (18)
மாலவி (19)
சரஸ்வதி (65)
மயூரா (18)

உள்ளிட்ட பெண்களும் இவ்வாறு குருணாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்:
எனினும் இது குறித்து பலரிடமும் சந்தேகங்கள் எழுந்துள்ளன. காரணம் ஏற்கனவே வன்னியில் மிக மோசமான காயங்களுக்கு உட்பட்ட பலர் வவுனியா, மன்னார் வைத்தியசாலைகளில் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு அனுப்பப்பட வேண்டியவர்கள் கூட பாதுகாப்பு விடயங்களைக் காரணம் காட்டி அனுப்பி வைக்கப்படவில்லை.
நிலமை இப்படி இருக்க தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் காயம் அடைந்தவர்கள் மட்டும் குருநாகல் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதன் பின்நோக்கம் என்ன என்ற கேள்விகள் எழுந்துள்ளதாக பெயர் குறிப்பிட விரும்பாத வவுனியாவின் முக்கியஸ்தர் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே இந்தக் குண்டு வெடிப்பில் கொல்லப்பட்ட பொதுமக்கள் தற்கொலைத் தாக்குதலில் கொல்லப்படவில்லை படையினரின் துப்பாக்கிச் சூட்டிலேயே கொல்லப்பட்டார்கள் மற்றும் காயம் அடைந்தார்கள் என்ற குற்றச்சாட்டு பலமாக எழுந்துள்ள நிலையில் இவர்களின் உடல்களில் தற்கொலைத் தாக்குதல்களுக்கான காயங்கள் காணப்படவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில் காயம் அடைந்தவர்கள் குருநாகல் வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளமை மேலும் சந்தேகங்களைத் தோற்றுவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
-குளோபல்தமிழ்நியூஸ்

Exit mobile version