Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தற்காலிக முகாம்களை சுயாதீனமாக பார்வையிடுவதற்கு அனுமதி வழங்கவும்- EU

உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்கள் தற்காலிகமாக தங்க வைக்கப்படுகின்ற முகாம்களை சுயாதீனமாகப் பார்வையிடுவதற்கு அனுமதி வழங்கவேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

பிரசல்ஸில் நடைபெற்ற ஐரோப்பிய ஒன்றிய வெளிவிவகார அமைச்சர்களின் கூட்டத்திலேயே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பில் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள தற்காலிக முகாம்கள் மற்றும் அவற்றில் தங்க வைத்தல் என்பன சர்வதேச தரத்திற்கேற்ப இடம்பெறுவதை உறுதிப்படுத்துமாறு ஐரோப்பிய ஒன்றியம் இலங்கை அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டுள்ளது. அத்துடன், தற்காலிக முகாம்களை சுயாதீனமாகப் பார்வையிடுவதற்கு அனுமதி வழங்குமாறும் ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது. தற்காலிக முகாம்களில் மனிதாபிமான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும். அத்துடன், யுத்தத்தை நிறுத்தி பொதுமக்களை அங்கிருந்து அகற்றுவதற்கான மனிதாபிமான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் இடமளிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் மகிந்த சமரசிங்க இது தொடர்பில் மனித உரிமைகள் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க கருத்துத் தெரிவிக்கையில், அரசாங்கக் கட்டுப்பாட்டுக்குள் வருகை தந்துள்ள மக்கள் போதிய வசதிகளுடன் அமைக்கப்பட்ட அகதி முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குத் தேவையான வசதிகளை செய்து கொடுக்குமாறு அரசிடம் கோரிக்கை விட வேண்டிய அவசியமில்லை. அங்குள்ள உண்மைத் தன்மையை நாம் எடுத்துக் கூறியுள்ளோம். அத்துடன், ஓமந்தை சோதனைச் சாவடியில் என்ன நடைபெறுகின்றது என்பதை பார்வையிடுவதற்கு வருமாறு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம், ஐரோப்பிய ஒன்றியம் என்பவற்றுக்கு நாம் அழைப்பு விடுக்கின்றோம் என்றார்.

Exit mobile version