தர்சானந்த இவ்வருடம் யாழ் பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றிய செயலாளராக மாணவர்களால் தெரிவு செய்யப்பட்டுள்ளபோதும், பல்கலைகழக நிர்வாகம் வேண்டுமென்றே இவரது தெரிவை இன்னமும் உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அதே நேரம் மே மாதம் 18 ஆம் திகதி முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை நிகழ்வை நினைவுகூற அழைக்கும் சுவரொட்டிகள் யாழ் பல்கலைக்கழகத்திற்குள் பரவலாக ஒட்டப்பட்டிருந்தமை தொடர்பில் யாழ் பல்கலைக்கழக மாணவர் பிரதிநிதிகளுக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
மாணவர் ஒன்றியச் செயலாளராக தெரிவு செய்யப்படுவதற்கு முன்பே தர்சானந்த் மிகச் சிறந்த சமூக சிந்தனையும் செயற்பாட்டுத்தறினும் உடைய பல்கலைக்கழக மாணவனாக விளங்கினார். அரசாங்கத்தினால் பிரச்சினைக்குரிய விடயங்களாக கருதப்படுகின்றபோதிலும் தமிழ் மக்களின் நலன் சார்ந்த விடயங்களைப் பற்றி வெளிப்படையாக வலியுறுத்துவதில் எவ்வித தயக்கமும் காட்டாதவர்.
அவரது சிறந்த தலைமைத்துவமே அவர் இலக்கு வைக்கப்படுவதற்குக் காரணம் என்பதில் எவ்வித சந்தேகமும் இருக்க முடியாது. இக் கோழைத்தனமாக தாக்குதலை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினராகிய நாம் மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றோம். இத்தாக்குதலானது தனிப்பட்ட தர்சானந்த் மீதானதோ அன்றி பல்கலைக்கழக சமூகத்தின் மீதானதே அல்ல இது ஒட்டுமொத்த தமிழ்த் தேசம் மீதான தாக்குதலாகும். இத்தாக்குதலானது நாகரீகமடைந்த மானிட சமூகத்தின் ஐனநாயக பண்புகளை இழிவுபடுத்தும் செயற்பாடாகும். இத்தாக்குதல் நடந்தவிதம், இடம், நேரம் என்பவற்றை வைத்துநோக்கும்போது இத்தாக்குதலானது இலங்கை இராணுவத்தினரின் பின்னணியின்றிச் செய்யப்பட்டிருக்க முடியாது என்பதில் எந்தவித சிறய சந்தேசமும் இருக்க முடியாது.
கNஐந்திரகுமார் பொன்னம்பலம் செல்வராசா கNஐந்திரன்
தலைவர் பொதுச் செயலாளர்