இருதரப்பிலும் தாக்குதல் நடைபெற்றுள்ளதுடன், அவ்வழியால் சென்ற, திருமதி தௌபீக் என்ற பெண்மணியும் கடுமையான தாக்குதலுக்குள்ளாகி, மண்டை பிளந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இருதரப்பு மோதலின்போது விகாரையின் மணி தொடர்ச்சியாக ஒலிக்கப்பட்டு சிங்களவர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக முஸ்லிம் இளைஞர்கள் தமது வாகனங்களில் ஏறி, அவ்விடத்தை விட்டகன்றுள்ளனர். அதன்போது அவர்களின் பல்சர் மோட்டார் சைக்கிள் ஒன்று மட்டும் கைவிடப்பட்ட நிலையில் விட்டு்ச்செல்லப்பட்டுள்ளது. சம்பவத்தினையடுத்து தர்காநகர் முஸ்லிம் இளைஞர்கள் ஐந்து பேர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டு்ள்ளனர்.
எனினும் இவர்களுக்கு சம்பவத்துடன் எதுவித சம்பந்தமும் இல்லையென்று பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். படுகாயங்களுக்குள்ளான திருமதி தௌபீக் தற்போதும் மருத்துவமனையில் சிகிச்சைபெறும் நிலையில் பொலிசார் அங்கு காவலுக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். திருமதிதௌபீக்கை அவரது குடும்பத்தவர் தவிர வேறு யாரும் பார்வையிட பொலிசார்அனுமதி மறுத்துள்ளனர்.
இந்த மோதலின் பின்னர் தர்கா நகரில் மீண்டும் பதற்ற சூழலுக்கான அச்ச உணர்வு தோன்றியுள்ளது. பொலிசாரும் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். கடந்த ஜுன் மாதம் இங்கு ஏற்பட்ட கலவரம் காரணமாக முஸ்லிம்கள் தரப்பில்ஐநூறு கோடிக்கும் அதிகமான சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கோத்தாபய ராஜபக்சவின் பொதுபல சேனா பௌத்த குண்டர்களால் ஆரம்பிக்கப்பட்ட இஸ்லாமியர்கள் மீதான இன வன்முறை இன்றும் முற்றாக ஓய்ந்துவிடவில்லை.