அண்மையில் தம்புள்ளையில் முஸ்லீம்களது பள்ளிவாசல் மீது பௌத்த சிங்கள இனவாதிகளால் நடாத்தப்பட்ட தாக்குதலை அரசும் அவர்களது படைகளும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தமையைக் கண்டித்து திருமாவளவன் குழுவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இன்று காலை முதல் துணைத் தூதரகம் முன்பு விடுதலைச் சிறுத்தைகள் குவியத் தொடங்கினர். முற்பகல் 11.30 மணியளவில் தூதரகம் முன்பாக வந்து சேர்ந்த தொல். திருமாவளவன் தமது தொண்டர்களுடன் தூதரகத்தை நோக்கி முற்றுகையிடச் சென்றார். முற்றுகைப் பேரணியின் போது சிங்கள இனவெறியர்களுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். ஆனால் அவர்களைக் காவல்துறையினர் சிறிது தொலைவில் தடுத்து நிறுத்தி கைதுசெய்தனர். திருமாவளவன் உட்பட 150 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தப் போராட்டத்தின் போது இலங்கை அதிபர் ராஜபக்சே, இலங்கை தேசியக் கொடி ஆகியவை தீ வைத்து கொளுத்தப்பட்டன.