Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தமிழ் வாத்தியமான பறை ஒலித்து வேதாந்தாவிற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் தமிழர்கள்(காணொளி)

uk-london-mining-foil-vedanta-protest2012 ஆம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற பிரித்தானிய மாகாராணியின் ஜூப்ளி நிகழ்வுகளில் கலந்துகொள்ள மகிந்த ராஜபக்ச வந்திருந்தார். மகிந்த ராஜபக்சவிற்கு எதிராக அவர் செல்லுமிடங்களில் எல்லாம் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. புலம் பெயர் தமிழர்கள் இந்த ஆர்ப்பாட்டங்களை ஒழுங்குபடுத்தியிருந்தனர். அப்பொழுது இன்னொரு நிகழ்வும் காதோடு காதுவைத்தது போல இரகசியமாக நடைபெற்றது. பொது நலவாய நாடுகளின் பொருளாதாரக் கூட்டம். அந்த நிகழ்வில் இரண்டு முக்கிய ‘உலகத் தலைவர்கள்’ கலந்து கொண்டு பிரதான உரையாற்றினர். ஒருவர் ஸம்பியா நாட்டின் ஜனாதிபதி மைக்கல் சாட்டா. மற்றையவர் இலங்கையின் இனக்கொலையாளி மகிந்த ராஜபக்ச. அன்றைய இரவு உணவு City of London Corporation இனால் வழங்கப்பட்டது. லண்டனில் பல்தேசிய வர்த்த நிறுவனங்களின் தங்குமடமான இந்த அமைப்பின் பெரும் நிதிவளத்தைக் கொண்டுள்ளது

இந்த இரண்டு தலைவர்களுக்கும் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்குமான பொதுவான ஆர்வம் ஒன்று இருந்தது. அதுதான் வேதாந்தா நிறுவனம். பிரித்தானிய நிறுவனமான வேதாந்தா ஸம்பியாவில் செப்புத் தாது அகழ்வை மேற்கொண்டு அந்த நாட்டின் வளங்களைச் சிதைத்துச் சின்னாபின்னம்மாகியுள்ளது. இலங்கையில் மன்னார் கடற்படுக்கையில் எண்ணை அகழ்வை மேற்கொண்டுள்ளது.

இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான கடற்படுக்கையில் எண்ணை மற்றும் எரிவாயு கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக மகிந்த ராஜபக்ச 2011 ஆம் அண்டில் உத்தியோக பூர்வமாக அறிவித்திருந்தார். இந்த அகழ்வில் இந்திய நிறுவனமாகப் பதிவுசெய்யப்பட்டிருந்த Cairn India இன் இலங்கைக் கிளையான Carirn Lanka முழுமையாகச் செயற்பட்டது.

இவை இரண்டும் வேதாந்தாவின் இலங்கை இந்தியக் கிளைகள்.

சம்பிய அரசு ராஜபக்ச அரசு போன்றே மக்களை ஒடுக்கிவருகின்றது. இதன் பின்னணியில் ஏகாதிபத்தியங்களும் வேதாந்தா போன்ற பல்தேசியப் பண வெறியர்களும் செயற்படுகின்றனர். லண்டனில் அமைந்துள்ள சம்பியா தூதகரக்த்தின் முன்பாக வேதாந்தாவின் கொள்ளைக்கு எதிராக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஈழத்தமிழர்களும் கலந்துகொண்டனர். பறை அடித்து இவர்கள் இவர்கள் எழுப்பிய எதிர்ப்பொலி பலரது கவனத்தையும் ஈர்த்தது.

<iframe width=”420″ height=”315″

Exit mobile version