தம்புள்ளை விவகாரத்தை ஒட்டி எழுந்த உணர்வுகள் இன்னும் அடங்கிப் போகவில்லை. நாம் பிரச்சினைகளை பேசித் தீர்க்க முடியும். எனவே இதனையும் பேசித் தீர்த்துக் கொள்ள முடியும்.
இத்தகைய விரும்பத்தகாத சம்பவங்கள் இடம்பெறுவதற்கு பின்னால் வெளிச்சக்திகள் இருக்கின்றதா? என்ற சந்தேகம் ஏற்படுகின்றது. இத்தகைய சம்பவங்கள் தொடர இடமளிக்க முடியாது.
நாட்டில் துரித அபிவிருத்தி ஏற்படும் வேளையில் துரிதமாக இனங்கள் மத்தியில் ஐக்கியத்தையும் சமாதானத்தையும் ஏற்படுத்த வேண்டும்.
அரசுக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் இடையில் பாலமாக தொழிற்பட்டு அரசியல் தீர்வுக்கான அடுத்த கட்ட நகர்வில் நாடாளுமன்ற தெரிவுக் குழுவுக்குள் தமிழ் தேசிய கூட்டமைப்பை உள்வாங்கிக் கொள்ள வேண்டிய அவசியம் நிலவுகின்றது.
நாட்டில் யுத்தம் முடிவடைந்தாலும் தேசிய பிரச்சினைக்கான தீர்வு பேச்சுவார்த்தை மூலம் காணப்பட வேண்டியுள்து. இதனை சர்வதேசமும் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றது.
எனவே இந்த அரசியல் தீர்வை நோக்கி நாம் நகர வேண்டும். பேச்சுவார்த்தை மூலம் அர்த்தமுள்ள சமாதானத்தை தோற்றுவிக்க முடியும். அரசாங்கம் நாமும் பரஸ்பரம் நம்ப வேண்டும். இதன் மூலம் பரஸ்பர நம்பிக்கை மற்றும் புரிந்துணர்வின் அடிப்டையில் செயற்பட முடியும்.
இரு தரப்பும் அவநம்பிக்கைள் மத்தியில் செயலாற்ற முடியாது. இந்த நம்பிக்கையைத் தான் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்திடம் எதிர்பார்க்கின்றது. எனவே பிரச்சினைகளுக்கான தீர்வுகளை பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்த்துக் கொள்ள முடியும் என்று நம்புகின்றேன் என குறிப்பிட்டார்.