Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தமிழ், முஸ்லிம் சமூகங்கள் ஒன்றிணைந்து அரசியலை எதிர்கொள்ள வேண்டும்:என்.பீ.எம்.சைஃபுதீன்

இலங்கையில் நடந்து முடிந்துள்ள நாடாளுமன்றத் தேர்தலின் முடிவுகள் தமிழ், முஸ்லிம் சமூகங்கள் ஒன்றிணைந்து அரசியலை எதிர்கொள்ள வேண்டும் என்பதை உணர்த்துவதாக விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

 சிங்கள பெரும்பான்மை வாக்குகளால் அமைக்கப்படும் புதிய அரசாங்கம் சிறுபான்மை மக்களின் பங்களிப்பின்றி அரசியலமைப்பு மாற்றங்களைச் செய்யக்கூடிய நிலை தற்போது உருவாகியுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறான நிலையை தற்போதைய அரசாங்கம் தொடர்ந்தும் ஊக்குவிக்குமானால் சிறுபான்மை சமூகங்களின் அரசியல் எதிர்காலம் பலவீனமான நிலைக்கே தள்ளப்படும் என பேராதனை பல்கலைக்கழகத்தின் அரசியலறிவுத்துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் என்.பீ.எம்.சைஃபுதீன் BBC -தமிழோசையிடம் கருத்து வெளியிட்டார்.
 
 சிறுபான்மை சமூகங்கள் ஒற்றுமையாக இணைந்து தேர்தலைகளை எதிர்கொள்வதன் மூலம் மட்டுமே தமது விகிதாசாரங்களுக்கு ஏற்ப பிரதிநிதித்துவங்களை பெற்றுக்கொள்ள முடியும் என அவர் சுட்டிக்காட்டினார்.

பல மாவட்டங்களில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் கடந்த தடவைகளைவிட இம்முறை குறைந்துள்ளமைக்கு ஒரே கட்சி வேட்பாளர்களுக்கிடையிலான போட்டியும் போட்டி கட்சிகளுக்கிடையில் வாக்குகள் சிதறிப்போனமையுமே காரணம் என சைஃபுதீன் கூறுகிறார்.

முஸ்லிம் மக்கள் வழமையாக பெற்றுவந்த பிரதிநிதித்துவங்கள் குறைந்துவருவதை முஸ்லிம் கட்சிகள் கருத்தில் கொள்ள வேண்டும் என்பதும் அவரது கருத்தாக அமைந்துள்ளது.

Exit mobile version