இலங்கையில் தமிழ் முஸ்லிம்கள் மீதான பாசிச அரசின் இனச்சுத்திகரிப்பைக் கண்டித்து பிரித்தானிய இளைஞர் குழுவினர் கண்டனப் போராட்டம் ஒன்றை ஒழுங்கு செய்துள்ளனர். பொதுபல சேனா என்ற இலங்கை அரசின் அடியாள் படையினால் அப்பாவித் தமிழ் முஸ்லீம்கள் அழிக்கப்படுகின்றனர். அவர்களது வீடுகளும் வர்த்தக நிலையங்களும் சூறையாடப்படுகின்றன. குழந்தைகளின் அழுகுரலுக்கும் முதியோரின் புலம்பலுக்கும் நம்பிக்கையை உரைக்க ஒடுக்குமுறையின் எல்லைகு வெளியில் வாழ்கின்ற நாம் போராடுவது இன்று எமது தேவையாகின்றது.
ஆர்பாட்டங்களைத் தொடர்ந்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வைத் தோற்றுவிக்கும் நோக்கத்தின் அடிப்படையில் போராட்டங்கள் நடத்தப்பட இவை ஆரம்பப்புள்ளிகள். போராடும் சமூகங்கள் தமது வலிகளைப் பகிர்ந்துகொள்ள ஆரம்பித்திருக்கின்றன. அதிகார வர்க்கமும் ஒடுக்குமுறையாளர்களும் கிலிகொள்ள ஆரம்பிக்கும் இந்தப் பகிர்வு அவசியமானதாகும்.
போராட்டம் நடைபெறும் இடம்: 10 Downing Stree / Tube: Westminister
காலம்: Tuesday 24th of June 2014
நேரம்: 4 PM