Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் ஊடக அறிக்கை

15வது சார்க் மாநாடு இலங்கையில் நடை பெறுவது எமக்கும் எமது நாட்டுக்கும் பெருமையாகும். அதே நேரம் இம் மாநாடு வெற்றிகரமாக நடைபெறுவதற்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்குவதுடன் விழிப்பாகவும் பாதுகாப்பு தரப்பினருக்கு புரண ஒத்துழைப்பையும் வழங்க வேண்டும் என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (TMVP) விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்ட்டுள்ளது.

மேலும் அவ்வறிக்கையில் தெரிவிக்கையில் இம்மாத இறுதியில் கொழும்பில் நடைபெறவுள்ள தெற்காசிய நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்ளும் சார்க் உச்சி மாநாடனது எமது நாட்டுக்கு கிடைத்துள்ள அரிய வாய்ப்பும் கௌரவமாகும் பயங்கரவாதத்தை தோற்கடிப்பாதற்கான யுத்தம் வட பகுதியில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுக் கெண்டிருக்கும் இவ்வேளையில் தெற்காசிய தலைவர்கள் எம் நாட்டில் ஒன்று கூடுவது முக்கிய திருப்பமாகும் பயங்கரவாதமானது இலங்கைக்கு மட்டும்மல்லாது தெற்காசிய நாடுகள் உட்பட முழு உலகிக்கும் பெரும் அச்சுறுத்தாலகவும் பெரும் அபாயகரமாகவும் மாறியுள்ளது. நடைபெறவுள்ள சார்க் உச்சி மாநாட்டின் போது பயங்கரவாதத்திற்கு எதிரான அனுகுமுறை தெடர்பில் கூடிய கவனம் செலுத்தப்பட வேன்டும்.

இவ்வாறன சர்வதேச தலைவர்கள் ஒன்று கூடும் கீர்த்தி மிக்க நிகழ்வென்றை அப்பாவி மக்களை பகடைக்காய்களாக பயன்படுத்தியாவது அதனை சீர்குழைப்பதற்கான கடும் பிரயத்தனங்களிள் பயங்கரவாதிகள் ஈடுபடலாம் இவ்வாறன சமயங்களில் மக்கள் விழிப்பாக இருப்பாதுடன் பாதுகாப்பு தாரப்பினருக்கு புரண ஒத்துழைப்பையும் உதவிகளையும் வழங்க வேண்டும்.

அதே நேரம் பாதுகப்பு காரணங்கள் நிமிர்ந்தம் பாதிப்புக்குள்ளாகி இடம்பெயர்கின்றமக்களுக்கான மாற்று வழிகளையும் உரிய இழப்பீடுகளையும் அரசாங்கம் துரித கதியில் வழங்க வேண்டும். அத்துடன் சார்க் மாநாட்டின் நிமிர்த்தம் கொழும்பின் புற நகரப்பகுதியில் உள்ள நடைபாதை வியபார நிலையங்களும் குடியிருப்புகளும் அகற்றப்பட்டுள்ளன இவ்வாறான நடவடிக்கையின் போது அரசாங்கம் பொறுமையுடனும் பொது மக்களுக்கான அசௌகரியங்களை முடியுமான அளவு தவிக்கும் வகையிள் திட்டங்களை வகுத்து நடைமுறைப்படுத்துவது சிறந்த தீர்மானமாக அமையும். அதே வேலை வடகிழக்கு உட்பட மலையகத்தில் இருந்து வரும் பொது மக்கள் மாநாடு நடைபொரும் தினங்களில் கொழும்பிற்கு வருவதை தவிர்த்து கொள்வதுடன் தேவையற்ற நடமாட்டங்களை நிறுத்துவது சிறந்ததாகும்.

எமது கிழக்கு மாகணமானது பயங்கரவாத பிடியிலிருந்து மீட்டெடுக்கப்பட்டு ஒர் ஆண்டு நிறைவடைகின்ற நிலையில் நடைபெற உள்ள சார்க் உச்சி மாநாட்டின் போது கிழக்கு மாகாணத்தின் கல்வி பொருளதார சமுக உட்கட்டமைப்புகள் பேன்றவற்றில் சார்க் தலைவர்கள் கூடிய கவனம் செலுத்த வேண்டும் என்பது எமது எதிர் பார்பாகும்.

Exit mobile version