Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தமிழ் மக்கள் விடுதலைக் கூட்டணி எனும் பெயரில் புதிய கட்சியா?:கருணா மறுப்பு.

21.12.2008.

தமிழ் மக்கள் விடுதலைக் கூட்டணி எனும் பெயரில் புதிய கட்சியொன்றை உருவாக்கியிருப்பதாக வெளியான தகவல்களை, பாராளுமன்ற உறுப்பினர் கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளீரதன் மறுத்துள்ளார்.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியிலிருந்து கருணா பிரிந்துசென்று புதிய கட்சியொன்றை உருவாக்கியிருப்பதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டிருந்ததது.
எனினும், அந்தச் செய்தியை மறுத்திருக்கும் கருணா புதிய கட்சியொன்றை உருவாக்கவேண்டிய தேவை ஏற்படவில்லையெனக் கூறியதுடன், தமது கட்சியை மேம்படுத்தி பல்வேறு திட்டங்களை முன்னெடுத்துச்செல்லப் போவதாகத் தெரிவித்துள்ளார்.
Exit mobile version