Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தமிழ் மக்கள் மீது நம்பிக்கை இல்லை – கே.பி மீது உண்டு : கோத்தாபய

தனது  சொந்த நாட்டு  மக்கள் மீதே வெறுப்புக் கொண்ட பாசிச அரசு!

வடக்கிலுள்ள மக்கள் மீது அரசாங்கத்திற்கும் தனக்கும் அதிக பட்ச சந்தேகமுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். நேற்று கொழும்பில் இடம்பெற்ற கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும், நல்லிணக்க ஆணைக்கழுவின் விசாரணைகளின் போது சாட்சியமளித்து உரையாற்றிய போதே இவ்வாறு அவர் தெரிவித்தார். வடபகுதி மக்கள் இன்னமும் விடுதலைப் புலிகள் மீது அனுதாபம் கொண்டவர்களாக இருக்கின்றார்கள். வடபகுதியைச் சேர்ந்த மக்கள் மத்தியில் சரணடையாத விடுதலைப் புலிகள் எத்தனை பேர் உள்ளனர் என எமக்குத் தெரியாது. அடையாளம் காணப்படாமல் எத்தனைபேர் உள்ளனர் என்பதும் தெரியாது. அவர்களில் பலர் விடுதலைப்புலிகளின் கொள்கைகளுக்கு ஆதரவாக முளைச்சலவை செய்யப்பட்டவர்கள். அவர்களே மிக ஆபத்தானவர்கள் எனவும் அவர் கூறினார்.

வடக்கில் விடுதலைப் புலிகள் மீண்டும் தலையெடுப்பதைத் தடுக்கும் பொருட்டு கணிசமான இராணுவத்தினரை அங்கு கடமையிலீடுபடுத்த வேண்டிய நிர்ப்பந்தம் அரசாங்கத்திற் உண்டு எனவும் அவர் தெரிவித்தார்.

கே.பி பற்றி அவர் குறிப்பிடுகையில், விடுதலைப் புலிகளின் மூத்த உப்பினரான கே.பியின் மனதை மாற்றுவதில் இராணுவம் வெற்றிகண்டுள்ளது எனவும் அரசுடன் இணைந்து ஒரே நாட்டை உருவாக்க வேண்டும் என்ற உணர்வை அவருக்கு ஏற்படுத்தியதை பலரும் வரவேற்கின்றனர். இது முக்கியமானதோர் விடயம் எனவும் குறிப்பிட்டார்.

Exit mobile version