Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

“தமிழ் மக்களை அவல நிலைக்கும் அரசியல் வறுமைக்கும் கொண்டுவந்து விட்டவர்கள் தமிழ்த் தலைமைகளே”

   

 தமிழ் மக்களை இன்றைய அவல நிலைக்கும் அரசியல் வறுமைக்கும் கொண்டு வந்து விட்டவர்கள் அனைத்துத் தமிழ்த்தலைமைகளுமே.
இவ்வாறு புதிய ஜனநாயகக் கட்சியின் சுயேட்சை வேட்பாளர் குழு6  இல் போட்டியிடும் முதன்மை வேட்பாளர் சி.கா.செந்திவேல், யாழ்.ப.நோ.கூ.சங்க மண்டபத்தில் கட்சியின் கொள்கை விளக்கத்தை வெளியிட்டு விளக்க மளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு,
தமிழ்த் தேசியத்தை உணர்ச்சி தரும் வகையில் மக்களிடையே கிளறி உண்மை களையும் யதார்த்தங்களையும் மறுத்தே வாக்குகள் பெற்று நாடாளுமன்றப் பதவி களை தமிழர் தரப்புகள் அனுபவித்து வந்தன. அவ்வாறு சென்றவர்களால் இதுவரை உருப்படியான எதையும் சாதிக்க முடியவில்லை.
இறுதியில் அழிவுகளையும் அவலங்களையுமே தேடித்தர முடிந்தது. இப்போது அதே தமிழ்த் தேசியம் என்ற பழைய குதிரையில் ஏறி நாடாளுமன்றம் செல்வதற்கு வெட்கம் இன்றி வாக்குகள் கேட்டு நிற்கிறார்கள். அதுவும் தங்களுக்குள் நான்கு கூறுகளாகப் பிளவுபட்டு நிற்கும் பரிதாபக் காட்சியையே காணமுடிகின்றது. ஆதலால் தமிழ் மக்கள் இத்தகைய தமிழ்த் தலைமைகளின் கடந்த காலக் கொள்கைகள், நடைமுறைகள் மீது சரியான விமர்சனத்தை மேற் கொள்ள வேண்டும். அதன் மூலம் எதிர்காலத்திற்கான உறுதியான மாற்றுக் கொள்கைகளைத் தெரிவுசெய்து தேர்தலில் வாக்களிக்க வேண்டும். இல்லாதுவிட்டால் எதிர் காலம் மேலும் இருள் சூழ்ந்ததாகவே ஆகிவிடும்.
பரம்பரை ஆதிக்க அரசியல் தலைமைகளின் வாரிசுகளுக்காக தூரநோக்கின்றி செக் கிழுத்த பழைய அரசியல் பாதைக்கு வாக்களித்தால் எவ்விதமான விமோசனமும் ஏற்படமாட்டாது. அதேவேளை தமிழ்த் தலைமைகளின் பிளவையும் இயலாமையையும் மக்களின் அதிருப்தியையும் பயன்படுத்தி ஆளும் வர்க்க பேரினவாதக் கட்சிகள் வெறும் சலுகைகளைக் காட்டி மக்களிடம் வாக்குகளைப் பெற்றுக்கொள்ள முனைந்தும் நிற்கின்றன.

அதற்காக  வாக்குறுதிகள், பணச்  செலவுகள் செய்தும் நிற்கின்றன. ஆனால் இதே அரசாங்கம், எதிர்க் கட்சிகளாக உள்ள இரண்டு பேரினவாத ஆளும் வர்க்க கட்சிக ளும் தமிழ் மக்களுக்கு இதுவரை இழைத்து வந்த வரலாற்றுக் கொடுமைகளையும் பேரழிவுகள், பேரவலங்களையும் பற்றித் தமிழ் மக்கள் கடந்த காலப்பட்டறிவாக உணர்ந்து கொள்ளத் தவறக் கூடாது. அவற்றுக்கும் அப்பால் இதுவரை இனப்பிரச்சி னைக்கு நியாயமான அரசியல் தீர்வை முன்வைக்கத் தயாராக இல்லாத பேரினவாத நிலைப்பாட்டுடனே இக்கட்சிகள் தமிழ் மக்களிடம் வாக்குகள் கேட்டு நிற்கின்றன. இதுவும் ஆளும் வர்க்க ஆதிக்க அரசியலின்  வெளிப்பாடே ஆகும். இதற்கு அடிபணிந்து வாக்களிப்பது முற்றிலும் அடிமைத்தன நிலைப்பாடேயாகும்  என்றார்.                      

 

Exit mobile version