Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தமிழ் மக்களைப் பின் தங்கிய சிந்தனைக்குள் முடக்கிவைத்திருக்க முயலும் அரசியல் தலைமைகள்

uswarshipஇலங்கைப் படையினருடன் அமெரிக்க படையினர் நித்தமும் போர் பயிற்சிகளில் ஈடுபட்டு வந்தனர். இதன் மூலம், இலங்கை படையினருக்கு உரிய பயிற்சிகள் அளிக்கப்பட்டதாகவும் ரோகித்த பாஷன சுட்டிக்காட்டினார். இதன்போது அவர் இலங்கையின் இறுதிப்போரின் போது அமெரிக்காவின் இணக்கப்பாடு இருந்ததாக குற்றம் சுமத்தினார் .
ரோம் நகரை தளமாகக் கொண்ட மக்கள் தீர்ப்பாயத்தின் மூன்றாம் நாள் நிகழ்வு, இன்று ஜேர்மனி பிரீமன் நகரில் இடம்பெறுகின்றது.

இந்த மக்கள் தீர்ப்பாயத்தின் போது, இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது, அமெரிக்கா, பிரித்தானியா, இந்தியா உள்ளிட்ட நாடுகளின் நிலைப்பாடு குறித்து சாட்சிகள் பதிவு செய்யப்படுகின்றன.
நேற்று இடம்பெற்ற விசாரணையின் போது தேதுன்ன சிங்கள செய்திதாளின் ஆசிரியர் ரோஹித்த பாஷன சாட்சியம் அளித்தார்.

இன அழிப்பிற்கு அமெரிக்கா பிரித்தானிய இந்தியா உட்பட தமது நிபந்தனையற்ற ஆதரவை வழங்கின என்பது ஒரு புறமிருக்க, அமரிக்கா கப்பல் கொண்டுவந்து காப்பாற்றும் என்று விடுதலைப் புலிகளையும் மக்களையும் வன்னிக்குள் முடக்குவதற்கு புலம் பெயர் அரசியல் தலைமைகளும் இலங்கை அரசிற்கு சார்பாக நடந்துகொண்டன.
பிழைப்புவாத தலைமைகள் மீது அப்பாவித்தனமாக நம்பிக்கைவைத்து பலர் அழிப்பதற்குத் துணைசென்றனர். புலம் பெயர் நாடுகளிலும் தமிழ் நாட்டிலும் அழிப்பவர்களை நம்பக் கோரியவர்களே இன்றும் தம்மைத் தமிழ்த் தேசிய வாதிகள் எனக் கூறிக்கொள்கின்றனர்.

இன்றும் ராஜபக்சவை அமெரிக்க அரசு தூக்கில் போடும் என்றும் பிரித்தானியா தமிழீழம் பிடித்துத் தரும் என்றும் மக்களை போலிப் பிரச்சாரங்களை மேற்கொள்கின்றனர்.

இதனால் உலகில் முன்னேறிய போராடும் மக்கள் பிரிவுகளிடமிருந்து தமிழர்களை அன்னியமாக்கி ராஜபக்ச அரசைப் பலப்படுத்தும் ‘துரோகத்தைச்’ செய்துவருகின்றனர்.

தமிழ்ப் பேசும் மக்களைப் பிந்தங்கிய சிந்தனை கொண்டவர்களாக முடகிவைத்திருப்பதற்கு இவர்கள் சதா முயல்கிறார்கள். மக்கள் சிந்திக்க ஆரம்பிக்கும் போது மக்களின் நீதிமன்றத்தில் வன்னிப் படுகொலையை ராஜபக்ச பாசிஸ்ட்டுகளோடு இணைந்து நடத்தியவர்களுக்கு நிச்சயம் தண்டனை கிடைக்கும்.

Exit mobile version