கருத்தாடல் களம்
‘இன்றைய சிறிலங்காவில் தமிழ் மக்களின் எதிர்காலமும், அதற்கான தீர்வுகளும்’
இடம்: Scarborough Civic Centre காலம்: 23.04.2011, சனிக்கிழமை முற்பகல் 9.00மணி தொடக்கம் பிற்பகல் 5.00மணி வரை.
‘இன்றைய சிறிலங்காவில் தமிழ் மக்களின் எதிர்காலமும், அதற்கான தீர்வுகளும்’ என்ற தலைப்பில் கருத்தாடல் களம் ஒன்றினைக் கூட்டி அதில் தமிழ் மக்களுடைய இனப்பிரச்சினை சார்ந்து செயற்படக் கூடிய அனைத்துத் தரப்பாரும் பங்கெடுத்துக் கருத்துச் சொல்லும் வகையிலான நிகழ்வொன்றினை ரொறொன்ரோ தமிழ் சிந்தனை வட்டம் ஏற்பாடு செய்கின்றது.
இந் நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, நாடு கடந்த தமிழீழ அவை, கனடியத் தமிழர் தேசிய அவை, தேடகம், மே 18 இயக்கம், Canadian Human Rights Voice ஆகிய அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கவிஞர் சேரன், கவிஞர் சுல்பிகா, நேரு குணரட்ணம், ஈழவேந்தன் ஆகியோரும் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார்கள்.
ஆர்வலர்கள் அனைவரையும் இக் கருத்தாடல் களத்தில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
-ரொறொன்ரோ தமிழ் சிந்தனை வட்டம்-
கருத்தாடல் களம்
‘இன்றைய சிறிலங்காவில் தமிழ் மக்களின் எதிர்காலமும், அதற்கான தீர்வுகளும்’
இடம்: Scarborough Civic Centre காலம்: 23.04.2011, சனிக்கிழமை முற்பகல் 9.00மணி தொடக்கம் பிற்பகல் 5.00மணி வரை.
‘இன்றைய சிறிலங்காவில் தமிழ் மக்களின் எதிர்காலமும், அதற்கான தீர்வுகளும்’ என்ற தலைப்பில் கருத்தாடல் களம் ஒன்றினைக் கூட்டி அதில் தமிழ் மக்களுடைய இனப்பிரச்சினை சார்ந்து செயற்படக் கூடிய அனைத்துத் தரப்பாரும் பங்கெடுத்துக் கருத்துச் சொல்லும் வகையிலான நிகழ்வொன்றினை ரொறொன்ரோ தமிழ் சிந்தனை வட்டம் ஏற்பாடு செய்கின்றது.
இந் நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, நாடு கடந்த தமிழீழ அவை, கனடியத் தமிழர் தேசிய அவை, தேடகம், மே 18 இயக்கம், Canadian Human Rights Voice ஆகிய அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கவிஞர் சேரன், கவிஞர் சுல்பிகா, நேரு குணரட்ணம், ஈழவேந்தன் ஆகியோரும் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார்கள்.
ஆர்வலர்கள் அனைவரையும் இக் கருத்தாடல் களத்தில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
-ரொறொன்ரோ தமிழ் சிந்தனை வட்டம்-
வேண்டுகோளைப் பிரசுரம் செய்ததற்காக ரொறொன்ரோ தமிழ் சிந்தனை வட்டம் சார்பில் நன்றிகள்.
ந.முரளிதரன்
சுவிஸ் முரளி ஈழம் பிடித்துக் கொடுத்து விட்டு கனடாவில் கரை ஒதுங்கியிருக்கிறார். அவருடைய தலைவர் பிரபாகரன் வருவார் என்று “தமிழ் சிந்தனை வட்டம்” கூடி புலம்பப் போகிறார்களா?
அந்த முரளி வெளியில் தலைகாட்ட முடியாத கிரிமினல் என்றல்லவா அறிந்தேன், இவா்களால் எப்படி மறுபடியும் இப்படி உலாவர முடிகிறது.
லண்டனிலிருந்து டொரொன்ரொ வரை கூடிக் கூடி பேசுகினம்.மப்பும் மந்தாரமுமாய் இருக்கு.என்ன மழை கொட்டப் போகுதோ.பெரியவையள் கொஞ்சம் அவிட்டு விடுங்கோ.
சிங்கிள் மோல்ட் விஸ்கி அடிச்சு கூடிக் கதைக்கிறதுக்கு எல்லாம் இப்ப அரசியல் விவாதம் எண்டு பெயர்.வெள்ளயிட்ட இருந்து நாங்கள அடித்துக் கொண்ட நாகரீகம் இதுதான்.ஆனா கோயில்ல கூடினவை அப்பிடி இல்ல எண்டு மேற்கால இருக்கிற சுந்தரேசன் சொன்னவர்.இருந்தாலும் நெருஞ்சி நீங்கள் ஆவேச்ப்படுகிறீரா, இல்ல வேசம் போடுறீரா? கிழக்கால இனி தேசக்காரரும் எதையோ செய்யப் போவதாய்க் கேள்வி.
செய்வதனை சீக்கிரம் செய்யுங்கள். இனியும் காலம் கடத்தினால் இலங்கையில் தமிழன் என்றொரு இனம் இருப்பது சந்தேகமே. அதற்கான செயல்பாடுகளில் பேரினம் மும்மூரமாக இறங்கிவிட்டது.
ஒரே “புலிக்” கூட்டமாக இருக்கிறதே! கூட்டத்துகுப் போனால் மீண்டும் “தமிழீழத்துக்கு” நிதி திரட்டுவார்களோ தெரியவில்லை.
இன்றுவரை சுய விமர்சனம் செய்யாத அலிபாபாவும் நாற்பது திருடர்களும், தமிழ் மக்களை மீண்டும் ஏமாற்றும் அபாயம் நேர்ந்துள்ளது. தமிழ் மக்களைப் பற்றியோ இலங்கையைப் பற்றியோ இந்த பகட்டுரை ஆசிரியர்களுக்கு கவலைகிடையாது. ஏட்டுப்பேச்சுடனும் கூட்ட கூச்சலுடன் தமிழரின் முதுகில் சவாரி விட அலிபாபாவும் நாற்பது திருடர்களும் கூடுவது நல்லததல்ல!.நாற்பது வருடத்துக்கு முன்னால் வெளிநாட்டில் வாழ்ந்த யாழ்ப்பாணத்தவரால் பங்களாதேஷ் போல தமிழீழமும் இந்தியாவின் துணையோடு வரும் என இலங்கைத் தமிழருக்கு தீர்வாக “தமிழீழம்” முன்வைக்கப்பட்டது. பின்னர் பிரேமதாசவின் உதவியால் இந்திய படைகளை அடித்து விரட்டி தீபாவளிக்கு தமிழீழம் வருகுது என்று வெள்ளி பார்த்து முப்பது வருடமாக இலங்கையிலும் வெளிநாட்டிலும் இருந்த தமிழருக்கு பீலா விட்டு சொத்துகளை பறித்து பிள்ளைகளை கடத்தி நாட்டையே பிணக்காடாக்கி பிணக்கணக்கு காட்டி வெளி நாட்டில் மில்லியன் கணக்கில் யுரோவையும் டாலரையும் சுற்றி, இறுதியில் வெளிநாடுகள் காப்பாற்றும் என்று பிலிம் காட்டி முள்ளிவாய்க்காலில் புலியையும் அழித்தனர் இந்த வெளிநாட்டு யாழ்ப்பாணத்தவர். இனி எதை அழிக்க எதை சுருட்ட இவர்கள் புறப்பட்டு இருக்கிறார்கள்? எந்த விதமான புது கப்சாக்களும் புலியின் சொத்துகளுக்கு இவர்களை வாரிசு ஆக்கிவிடாது. சனமும் இனி ஒரு சதமும் கொடுக்க போவதில்லை
அலிபாபாவுக்கு ஏது? சுயவிமர்சனம்.விமர்சனம். கொடு இல்லை செத்துமடி என்பது தான். இதுவே இன்றைய தமிழரின் பண்பாடு புலம்பெயர்மண்ணில்.
இனிஎன்ன வேண்டும் உங்களுக்கு? அரசியல் அபிலாஷைகள் ஏதாவது இருக்குமென்று கணக்கு போடுகிறீர்களா? அவர்களுக்கு இருக்கவே இருக்கிறது. அது லுமம்பனுக்குரிய குணாம்சமே!. தயவுசெய்து இதை பெரிதுபடுத்தாமல்கருத்தை ஆற்றுங்கள்.நானும் உங்களைப் போல் தான். எப்படி விடியும் என எதிர்பார்த்திருக்கிறேன். எமக்கெல்லாம் பாதகமாக முடியவும் சந்தர்ப்பம் உண்டு. வருவதை ஏற்றுக்கொள்வோம்.
தமிழரின் பெயரைச் சொல்லியும், புலிகளின் போராலும் வேலையின்றி
உழைத்தவ்ர்கள், முதல்போடாமல் முதலாளியானவர்கள். இவர்கள்.
சும்மா இருந்தால்
மக்கள் கேள்வி கேட்பார்கள். வீதியில்போனால் தலையைக் குனிய வேண்டும். ஏதாவது இப்படி செய்தால்தானே வாழ்நாளின் இறுதிக்காலத்தைக்களிக்கலாம்.
இவர்களின் கறுப்புப் பணங்கள் இந்தியாவுக்குள் காலம் காலமாகவும், பிறநாடுகளிலும் குவித்து விட்டார்கள். இப்போ சந்தர்ப்பம் இலங்கையில் வாய்த்துவிட்டது. சொந்த ஊரிற்கு கொண்டுபோவதைப்பற்ரியே இவர்களின்
சிந்தனை. முன்பு தமிழரின் அழிவில் தேடிய பணத்தை இப்போ தமிழரின்
அழுகையில் கணக்குப்பார்க்கிறார்கள். இவர்களில் யாராவது பகிகங்கமாக
தங்கள்
மறுப்பினைத் தெரிவிப்பார்களா? -துரை
தமிழர் என்ற திமிரில் வெற்று தலையர் நாங்கள் இனவெறியில் சிங்கள எதிர்ப்பு பேசி கடைசியாய் ஆயிரக்கணக்கில் பிள்ளைகளையும் பறிகொடுத்து கோடிகணக்கான சொத்துக்களையும் இழந்து நிற்கிறோம்.தமிழ்ஈழம் வரும் என்று ஊர்காசில் தினமும் தறுதலைகளின் திருவிழா கொண்டாடி எங்க பிள்ளைகளை நரபலி கொடுத்து முள்ளிவாய்க்காலில் கோவணத்துடன் வெள்ளி பார்த்த வெங்காயத் தலையனும் அம்மணமாகி அவன் வினை அவனை சுட்டதால் . கூண்டோடு அழிந்து போனான்
விட்ட தவறுகளை மறுப்போரும், செய்த குற்ரங்களை ஏற்காதவரும் தமிழினத்தின் தலைவராகவோ, அல்லது வழிகாட்டியாகவோ ஒருபோதும் இருக்கமுடியாது. இன்றைய சூழலில் இலங்கையில் சமாதானமும், தமிழ் சிஙகள, முஸ்லிம் இனங்களிற்கிடையே ஒற்றுமையுமே முக்கியமானது. புலத்தில் வாழும் தமிழர் சிங்களவர் தமிழரிற்கு பகைவர்கள் என்பதனை மட்டுமே தளமாகவைத்து நடத்தும் போராட்டங்கள் ஈழ்த்தமிழர் நிலைமையை மேலும் மோசமடையச் செயுமே தவிர ஒருவ்கையான தீர்வையும் தரப்போவதில்லை.
இனி ஒரு போதும் அழிவுகள் இலங்கை மண்ணில் இல்லாமல் போக வேண்டுமானால் , மிகுதி தமிழரும் சுபீட்சமாக வாழ வேண்டுமானால் அனைத்து மக்களும் இலங்கை முழுவதும் பரவி வாழும் நிலைமை உருவாக வேண்டும். இது ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளவும், மொழி அறிவை பகிர்ந்து கொள்ளவும் ,அப் பகுதியின் வளர்ச்சிக்கான நிதி பங்கீடுகளை சம அளவாக பெறவும் உதவும். ஒரு பகுதியின் முன்னேற்றமே அம் மக்களின் வாழ்வை வளமாக்கும். தமிழரோடு சிங்களவரும் கலப்பதால் அங்கு முன்னேற்ற வழிவகைகளுக்கான நிதி பங்கீடுகள் சிங்கள பகுதிகளுக்கு போல் கிடைக்கும் வாய்ப்புகள் அதிகம். மொழி வாழ வேண்டுமானால், அந்த மொழி பேசும் மனிதன் வாழ வேண்டும். அந்த மனிதன் வாழ வேண்டுமானால் அந்த மனிதன் உயிரோடு இருக்க வேண்டும். அதைவிடுத்து இன்னொரு இன அழிப்புக்கான எண்ணங்கள் இனி எவர் மனதிலும் உருவாக்கப்படக் கூடாது.
Good taught – have to think about the future
“கூடிக் கதைச்சதை” யாரும் வெளிவிடுவினம் எண்டு பார்த்தா,ஒண்டையும் காணேல்ல.
கனேடிய தமிழ் சிந்தனை வட்டம் : விவாதக்களம் ஒரு பார்வை
வெள்ளிக்கிழமை!- 23-04-2011
சிறிய மழைத்துறல்…கடந்த சில நாட்களைப் போல அல்லாது…சிறிது வெப்பமான நாள்….
இவ்வாறான நாட்களுக்காக குளிர்காலம் முடிந்தவுடன் கனேடியர்கள் ஏங்குவதும்…அவ்வாரும் பொழுது ஆனந்தக் கூத்தாடுவதும்; வழமை….
அவ்வாறான ஒரு நாளில் கனேடிய தமிழ் சிந்தனை வட்டம் “இன்றைய சிறிலங்காவில் (இலங்கையல்ல) தமிழ் மக்களின் எதிர்காலமும் அதற்கான தீர்வுகளும்” என்ற தலைப்பில் ஒழுங்கு செய்திருந்தது. இதில் கனடாவில் உள்ள பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களின் கருத்துகளை கேட்பதற்கும் அவர்களுடன் கலந்துரையாடுவதற்குமான சந்தர்ப்பத்தையும் வழங்கியிருந்தது. இவ்வாறான ஒரு முழு நாள் நிகழ்வை ஒழுங்கு படுத்துவதும் பேச்சாளர்களை வரவழைப்பதும் என்பது மிகவும் கடினமாக வேலையே. அதுவும் எந்தவிதமான அரசாங்க அல்லது புலி ஆதரவு அற்ற (?) அமைப்புகளுக்கு இவ்வாறான பணி அதிகப்படி கடினமானது என்றால் மிகையல்ல. அந்தவகையில் இதை ஒழுங்குபடுத்தியவர்கள் பாராட்டுக்குரியவர்கள். இந்த நிகழ்வு தொடர்பான சிறிய குறிப்பு இது. இந் நிகழ்வு மூன்று அரங்குகளாக நடைபெற்றது. ஒவ்வொரு அரங்கின் இறுதியிலும் கருத்தை கேட்டவந்தோர் கேள்வி கேட்பதற்காக ஒதுக்கப்பட்டிருந்தது.
http://meerabharathy.wordpress.com/2011/04/26/%e0%ae%95%e0%ae%a9%e0%af%87%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9%e0%af%88-%e0%ae%b5%e0%ae%9f%e0%af%8d/
ஆக கொஞ்சப் பேர் முகம் காட்ட,கொஞ்சப் பேர் பேரெடுக்க,
மற்றப்படி பிரபாகரன் செத்ததை ‘confirm’ பண்ணிணா நாம உசாராக் கதைக்கலாம் எண்டதைப் பேராசிரியரும்,
உந்த பிடிபட்ட புலிகளைப் போர்க்குற்றத்திலை மாட்டினா,ஒதுக்கின காசைக் கேட்க யாரும் வரமாட்டினம்,எண்ட முன் கூட்டிய யோசனையை சபானாயகரும்,உரைக்கல்லாக்கி, இருக்கினம்.
புதுசாவும் சொல்லியிருக்கினம்
கனடிய எலெக்சனில யாருக்கு வோட் போடுறது நம்மிட எதிர்காலமும் தீர்வும் கண்டியளே.
உந்த வட்டத்துக்குள்ள நிக்கிறதுக்கு சிந்தனை தேவையோ?
நடந்த கூட்டம் பற்றிய ஒருவர் தந்த தகவல்.
” ‘ரொறொன்ரோ தமிழ் சிந்தனை வட்டம்’ என்பது ‘தமிழ் மக்களின் எதிர்காலமும், அதற்கான தீர்வுகளும்’ என்கிற தலைப்பில்,கருத்தாடல் களம் எண்டு, தமிழ் மக்களை ஏமாத்தி,கனடா லிபரல் கட்சியின் BOB RAY யை பேச வைத்து,அவருக்கு வாக்கு தேட வழி செய்துள்ளார்கள்.
அத்துடன் கொஞ்சப் பேர் வந்து( கவிஞர் சேரன், கவிஞர் சுல்பிகா, நேரு குணரட்ணம், ஈழவேந்தன்) அலட்டிற்றுப் போனார்கள்.”
எங்கடை எதிர்காலமும் தீர்வையும் பாருங்கோ! கூட்டத்தில அன்னதானம் வேறை.