Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தமிழ் மக்களால் இன்று அதிகம் விரும்பப்படும் ஒரே தமிழ்த் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா:S.L.D.F-ரங்கன் தேவராஜன்.

ஈ.பி.டி.பியினருக்குக் கிடைக்க வேண்டிய வாக்குகளை அபகரிப்பது மட்டும் இன்றைய தமிழ்த் தேசிய அரசியல் வாதிகளின் நோக்கமல்ல. ஈ.பி.டி.பி.யிலிருந்து மக்களைப் பிரிப்பது தான் அவர்களின் திட்டமாகும் என . ஈ .பி.டி.பி யின் ஆலோசகரும், லன்டனில் இயங்கும் இலங்கை ஜனநாயக முன்னணியின் SRI LANKA DEMOCRACY FORUM (SLDF)   முக்கிய உறுப்பினருமான சட்டத்தரணி ரங்கன் தேவராஜன்  தெரிவித்தார்.

யாழ் வீரசிங்கம் மண்டபத்தில்  சனி  (03) நடைபெற்ற யாழ் மாவட்ட பனை தென்னைவள அபிவிருத்தி கூட்டுறவு நிறுவனங்களின் எழுச்சிக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் இன்றைய சூழ்நிலையில் ஈ.பி.டி.பி.க்கு எதிராக அவதூறான தார்மீகமற்ற , ரவுடித் தனமான முறையில் யாழ்ப்பாண அச்சு ஊடகங்கள் சிலசெயற்பட்டு மக்களை தவறான வழியில் இட்டுச் செல்ல முயன்று வருகின்றன.

அண்மையில் யாழ் மேயர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா அவர்கள் தாக்கப்பட்டமை மற்றும் அவரது வாகனங்கள் நொறுக்கப்பட்டமை தொடர்பாக மேயர் அவர்கள் ஊடகவியலாளர் மாநாட்டை நடாத்தி உண்மைக் கருத்துக்களை கூறியிருந்த போதிலும் முதல்நாள் தவறான செய்தியை பிரசுரித்த நாளிதழைத் தவிர மறுநாள் எந்த யாழ்ப்பாண நாளிதழ்களும் அந்தச் செய்தியை பிரசுரிக்கவில்லை. இவ்வாறான செய்திகளை பிரசுரிக்காமல் சில கட்சிகளின் ஊதுகுழல்களாக இத்தகைய நாளிதழ்கள் விளங்கி வருகின்றன.

இப்பத்திரிகைகள் இவ்வாறு செயற்படுகின்ற போதிலும் தமிழ் மக்களால் இன்று அதிகம் விரும்பப்படும் ஒரே தமிழ்த் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மட்டுமே.அதுமட்டுமல்லாமல் ஜனநாயகக் காவலனாகவும் , உழைக்கும் மக்களின் தோழனாகவும் என்றைக்கும் தன்னை அடையாளப்படுத்தி வருகின்றார் என சட்டத்தரணி ரங்கன்  தேவராஜன்  தெரிவித்தார்.மக்களுடைய தேவைகளை அறிந்து அவற்றை நிவர்த்தி செய்தவருக்கு செய்து கொண்டிருப்பவர்களுக்குமே உங்களது வாக்குகளை வழங்கி அவர்களை நாம் ஆதரிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.தமது சுயநலன்களுக்காகவும் , சுகபோக வாழ்க்கைக்காகவுமே ஏனைய அரசியல் கட்சிகள் உங்களிடம் வாக்குக் கேட்டு வருகின்றனர்.எனவே உங்களது ஒட்டுமொத்த வாக்குகளை எமக்களிக்கும் பட்சத்தில் நிச்சயம் வளமானதொரு எதிர்காலத்தில் எமது மக்கள் பயணிப்பார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

  –  யாழ்ப்பாணத்திலிருந்து சுதாகரன்-

Exit mobile version