Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தமிழ் பல்தேசிய வர்த்தகரின் துணையோடு மண்டைதீவில் நிலப்பறிப்பு

mandaithivuஇந்தோனேசியாவைச் சேர்ந்த பிரபல தமிழ்த் தொழிலதிபர் வாசுதேவன் இராசையா மண்டைதீவைச் சுற்றுலா மையமாக மாற்றும் திட்டத்திற்கு முதலீடு செய்கிறார். வாசுதேவன் இராசையா என்ற தொழிலதிபர் முதலீடு செய்கிறார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. இவரூடாக பிரித்தானியாவைச் சேர்ந்த மற்றொரு தமிழ்ப் பல்தேசிய நிறுவனமும் இந்தப் பல மில்லியன் முதலீட்டில் தொடர்ப்புடையதாக இருக்கலாம் என உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

வடக்கின் ஆளுநர், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அரசாங்க அதிபர், வேலணை பிரதேச செயலர், வேலணை பிரதேசசபை, கடற்றொழில் நீரியல் வள அமைச்சு, சுற்றுச்சூழல் அமைச்சு இணைந்த கூட்டம் ஒன்று அண்மையில் நடைபெற்றது.

200 ஏக்கர் நிலத்தில் அமைக்கப்படும் இச் சுற்றுலா மையத்தில் 2000 பேருக்கு வேலைவாய்பு வழங்கப்படும் என்கிறது இலங்கை அரசு.

பல்தேசியச் சுரண்டலுக்கு முழு இலங்கையையும் உட்படுத்தும் ஏகாதிபத்தியங்களின் நட்பு அரசான ராஜபக்ச பாசிச அரசு வடபகுதியை முற்றுமுழுதான கலாச்சார பண்பாட்டு அழிப்பிற்கு உட்படுத்துவதற்கும் தேசியப் பொருளாதாரத்தை அழிப்பதற்காகவும் இலாப வெறிகொண்ட பல்தேசிய நிறுவனங்களை அழைத்து வருகிறது.

இதேவேளை இலங்கையின் ஹப்புத்தல என்ற இடத்தில் 400 ஏக்கரில் இதே தொழிலதிபரின் ஊடாக சுற்றுலா மையம் ஒன்றை நிறுவுதற்காக முதலிடப்படுகின்றது.

இத்திட்டம் கடந்த 2012 ல் இருந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

தமிழ்ப் பேசும் மக்கள் சுயநிர்ணைய உரிமை கோரிப் போராடினால் தமிழ் வர்த்தகர்கள் சார்பில் இலங்கை இராணுவம் அழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும்.

Exit mobile version