
மக்களின் பணத்தைக் கொள்ளையடித்த ஜெயலலிதாவை விடுதலை செய்ய கோரி திருநெல்வேலி மாவட்டம், கலிங்கப்பட்டியில் அ.தி.மு.க.,வினர் உண்ணாவிரதம் இருந்தனர். அப்போது பேசியவர்கள் ம.தி.மு.க.பொதுச் செயலாளர் வைகோவை விமர்சனம் செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, இரு தரப்பினரும் மோதிக் கொண்டனர். அண்மைக்காலத்தில் ஈழத் தாயான ஜெயலலிதா குழுவிற்கும் நீண்டகால ஈழ வியாபாரம் நடத்தும் வை.கோ குழுவிற்கும் இடையே மோதல் நடைபெற்றது. மோதல் முற்றி கல்வீச்சு வரை சென்றது. கல் வீச்சில் சிலர் காயமடைந்தனர். போலிஸ் தலையிட்டது. ஈழ மக்களின் அவலம் தமிழ் நாட்டில் அரசியல் வியாபார மோதலாகி வருகிறது.