திருச்சியில் அமைந்துள்ள சிறப்பு முகாமில் அவுஸ்திரேலியாவிற்குச் செல்ல முற்பட்டமை, கடவுச்சீட்டு இன்றி இந்தியாவிற்குள் நுளைந்தமை போன்ற குற்றங்களுக்காக ஈழத் தமிழ அகதிகள் 25 மிகவும் மோசமான சூழலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். கடந்த 15ம் திகதி முதல் தங்களை விடுதலை செய்யக்கோரி உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டிருந்தனர். அரசு தங்களை விடுதலை செய்ய வேண்டும். அவ்வாறு விடுதலை செய்வதில் சட்டச்சிக்கல்கள் இருப்பதாக கருதினால் ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் முதலமைச்சரின் தனிப் பிரதிநிதிகள் தங்களை நேரில் சந்தித்து விசாரணை செய்து தனிமனித உரிமையை மதித்து நடவடிக்கை எடுக்ககோரி உண்ணாவிரதப்போராட்டத்தினை ஆரம்பித்தனர்.
தமிழ்ப் பேசும் மக்களின் சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டத்தைத் தமிழ் நாட்டில் கடத்தி வைத்து பிழைப்பு நடத்தும் இனவாதிகளோ அன்றி இனவாதிகள் ஆதரவு வழங்கிய அ.தி.மு.க அரசோ அகதிகளைக் கண்டுகொள்ளவில்லை.
இதனால் விரக்தியடைந்த அகதிகள் தூக்கமாத்திரை உட்கொண்டும் தற்கொலைக்கு முயற்சித்தனர். இதனைத் தொடர்ந்து தூக்க மாத்திரை உட்கொண்ட அனைவரும் மருத்துவ மனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.