இலங்கை ஜனாதிபத்தித் தேர்தலில் முன்னைய புலிகள் ஆதரவுக்
வன்னிப் போர் நிகழ்ந்து கொண்டிருந்த காலப்பகுதியில் இலங்கை என்பது சிங்களவர்களின் நாடு என்றும் தமிழர்கள் வேண்டுமானால் வாழ்ந்து விட்டுப் போகலாம், உரிமைகளைக் கோரமுடியாது என்று பல செவ்விகளை வழங்கியிருந்தார். ராஜபக்சவிற்குப் போட்டியாக இனவாதக் கருத்துக்களைப் பரப்புவதிலும் இனவழிப்பை மேற்கொள்வதிலும் சரத் பொன்சேகா திவிரமாக ஈடுபட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதே வேளை புலி எதிர்ப்பாளர்களில் பெரும்பாலானவர்கள் மகிந்த ஆதரவுப் பிரசாரம் மேற்கொள்வதும் இங்கு சுட்டிக்காட்டத் தக்கது.