Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தமிழ் சினிமாவில் புலிகளின் பணம் ஆண்டுக்கு ரூ.350 கோடி புழக்கத்தில்!:காங்கிரஸ் பிரமுகர்.

  தமிழ் சினிமாவில் விடுதலைப்புலிகளின் பணம் ஆண்டுக்கு 350 கோடி ரூபா வரை பழக்கத்தில் விடப்படுகிறது. அதேச மயம் சட்டம்  ஒழுங்கை சீர்குலைக்கும் வகை யில் கூட்டங்களில் பேசி வரும் திரைப்பட இயக்குநர் சீமான் மீது உடனடியாக நட வடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு கூறுகிறார் முன்னாள் மத்திய அமைச்சரும் தமிழகத்தின் மூத்த காங்கி ரஸ் தலைவர்களில் ஒருவருமான எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம்.

சென்னையில் அவர் செய்தியாளர்களிடம் மேலும் கூறியவை வருமாறு:
தமிழ்ச் சினிமாவில் ஆண்டுக்கு ஆயிரம் கோடி ரூபாவரை முதலீடு செய்யப்பட்டு வருகிறது. இதில் வெளி நாடுகளிலிருந்து விடுதலைப்புலிகளின் பணம் இங்குள்ள முக்கியநபர்கள் மூலம் தமிழ்ப் படத் தயாரிப்புகளில் புழக்கத்தில் விடப்பட்டுள்ளது. ஆயிரம் கோடியில் மூன்றில் ஒரு பங்கு , அதாவது 350 கோடி ரூபா வரை தமிழ்ப் படங்களில் இவ்வாறு புழக்கத்தில் விடப்பட்டுள்ளது. இதனால் தான் புதிய படங்களின் தயாரிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளன. இதைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திரைப்பட இயக்குநர் சீமான் , “நாம் தமிழர்’ என்ற இயக்கத்தைத் தொடங்கி  செயல் வீரர்கள் கூட்டத்தை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடத்தியிருக்கிறார்.

இக்கூட்டங்களில் சீமான் பேசியவை இந்திய இறையாண்மைக்கும்,  ஒருமைப் பாட்டுக்கும் எதிரானவை. பணத்தைப் பற்றிக் கவலைப்படாதே , எத்தனை ஆயிரம் கோடி பணம் தேவைப் பட்டாலும் அதைத் தர பலரும் தயாராக இருக்கிறார்கள் என்றும் உறுதியளித்துள்ளார்.
இந்திய ஒருமைப்பாட்டின் மீது நம்பிக்கை வைத்து , கருணாநிதி செயலாற்றி வரு வதை சீமானால் தாங்கிக்கொள்ள முடிய வில்லை. தலைவர்களுக்கு எதிராக மக் களை தூண்டிவிடும் வகையிலும் சீமான் பேசிவருகிறார்.

இந்தியா இனிமேல் எங்களுக்குப் பக்கத்து நாடு தான். எங்கள் நாடு இல்லை. இனிமேல் இந்திய இறையாண்மை என்று யார் பேசினாலும் அவர்களை நாடு கடத்து வோம். தமிழர் அல்லாதோர் கடைகளை யும் , நிறுவனங்களையும் அடித்து நொறுக்குங்கள் , எதைப்பற்றியும் கவலைப்படாதீர்கள் , நான் இருக்கிறேன்’ என்றும் சீமான் பேசி வருகிறார்.

சீமானின் நடவடிக்கையை தடுத்து நிறுத்தாவிட்டால் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விடும். முதல்வர் கருணாநிதி உட்பட பல தலைவர்களுடைய உயிருக்கும் உத்தரவாதம் இல்லாத நிலை ஏற்படும்  என்றார்.

Exit mobile version