எங்களை நம்புங்கள் நாங்கள் நாங்கள் உங்களுடன் பணியாற்றுகிறோம் என ராஜபக்ஷவிற்கு தமிழ் எம்.பி.க்கள் தெரிவத்துள்ளனர், ஜனாதிபதி த.தே.கூட்டமைப்பின் எம்.பி. க்கைளை இரு தடவை சந்தித்துள்ளார், சம்பந்தனுடன் விரைவில் சந்திப்பு நிகழும், அரசாங்கத்தின் இதய சுத்தியுடனான முயற்சிகளுக்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள தமிழர்கள் சாதகமான முறையில் பதிலளிக்கின்றனர் என ஜி.எல்.பீரிஸ் புதுடில்லியில் இந்துப் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார். இப்பேட்டியில் புலம்பெயர்ந்த 10 இலட்சம் இலங்கைத் தமிழர்கள் தொடர்பாக கோதாபாயவும் தானும் செயற்பட்டு வருகிறோம் எனவும் தெரிவித்திருக்கிறார். இலங்கையிலிருந்து அகதிகள் அந்தஸ்து கோரி வந்தோர் விடயத்தில் அவுஸ்திரேலிய மிகக் கடுமையாகவிருக்க வேண்டும் என கோதபாய ராஜபக்ஷ அவுஸ்திரேலிய பத்திரிகையொன்றிற்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்திருக்கிறார். மேலும் புலிகளுடனான இறுதி யுத்தத்தில் தப்பியவர்களில் சிலர் வேறு வகையாக தொடர்ந்தும் போரிட முயற்சிக்கின்றனர். அவர்கள் வேறு நாடுகளில் அணிதிரள்வது தெரிய வந்தள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.