Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தமிழ் ஈழம் மலர்ந்தே தீரும் : கருணாநிதி புதிய நாடகம்?

தமிழ் ஈழம் மலர்ந்தே தீரும் என்று கருணாநிதி அறிக்கை விடுத்துள்ளார். தமிழினத் தலைவன் வேடம் போட்டிருந்த கருணாநிதிக்கு நிகராக நடிப்பதற்கு ஜெயலலிதா கற்றுக்கொண்டதன் எதிரொலியாக இப்போது கருணாநிதி தமிழ் ஈழம் குறித்து பேச ஆரம்பித்துள்ளார். தமிழ் நாட்டு அரசியல் வாதிகளால் ஈழத் தமிழர்கள் வெறும் துருப்புச் சீட்டாக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறார்கள்.
2009 இல் முள்ளி வாய்க்கால் படுகொலைகள் நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில் கருணாநிதியுடன் இணைந்து ஒரு நாடகத்தையே நடத்தியதாக கோதாபாய ராஜபக்ச கூறியிருந்தார். அதே கோதாபய இப்போது கருணாநிதியின் தமிழ் ஈழம் குறித்தும் கருத்து வெளியிட்டுள்ளார். ஆக, புதிய நாடகம் ஒன்று ஒத்திகை பார்க்கப்படுகிறதா என்ற அச்சம் உருவாகியுள்ளது.
கொசோவோ, தெற்கு சூடான், கிழக்கு திமோர், மாண்டி நீக்ரோ ஆகியவற்றை தனி நாடாக பிரகடனப்படுத்துவதற்கு ஐக்கிய நாடுகள் சபையால் நடத்தப்பட்ட வாக்கெடுப்புகளே காரணமாக அமைந்தன. அதேபோல இலங் கையிலும் வாக்கெடுப்பு நடத்துவது குறித்து சிலர் ஆலோசிக்க துவங்கியுள்ளனர்.

அதேபோன்ற ஒரு நடைமுறையை தான் தனி தமிழ் ஈழத்தை பொறுத்தவரை பின்பற்ற வேண்டு மென்று நாம் கோருகிறோம். அதற்கு தான் இந்திய அரசின் ஒத்துழைப்பை நாடுகிறோம். இந்த வாக் கெடுப்பு பற்றி, நான் இப்போதல்ல, 14-10-1987ல் சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசும்போதே, ஒப்பந்தத்தில் ஒரு முக்கியமான ஷரத்து – வட கிழக்கு பகுதிகள் இரண்டு மாகாணங்கள் – அவை இரண்டையும் ஒன்றாக சேர்த்து ஈழத்தமிழ் மாநிலமாக தமிழர் தாயகமாக ஒரு மாநில அரசு அங்கே உருவாகக்கூடிய அளவிற்கு அதிக அதிகாரங்களை கொண்ட சுயாட்சி உரிமையோடு கூடிய ஒரு மாநில அரசு உருவாகக்கூடிய அளவிற்காவது இடை காலத்தில் குறிக்கோள் தமிழ் ஈழம் என்றிருந்தாலும் கூட, ஒரு ஏற்பாடு ஒப்பந்தத்தில் வேண்டும் என்று போராளிகள் கேட்டார்கள். நாமும் அதைத் தான் வலியுறுத்தினோம்.

ஒப்பந்தம் கையெழுத்தான அடுத்த வாரமே, இலங்கையிலே, கொழும்பிலே ஜெயவர்த்தனா, ராஜீவ் காந்திக்கு பக்கத்திலே அமர்ந்து ஒப்பந்தத்திலே கையெழுத்து போட்ட ஜெயவர்த்தனா கிழக்கு மாகாண மக்கள் விரும்பினால் இணைந்திருக்கலாம் இல்லாவிட்டால் தனித்திருக்கலாம் என்ற கருத் தமைந்த ஷரத்தை எழுதி கையெழுத்து போட்ட அதே ஜெயவர்த்தனா அப்படி ஒரு பொதுத் தேர் தல் வரும் போது, வாக்கெடுப்பு நடத்தும் போது, நான் கிழக்கு மாகாணத்திற்குச் செல்வேன், கிழக்கு மாகாணம், வடக்கு மாகாணத்தோடு இணைகின்ற அந்தக் கருத்திற்கு எதிராகப் பேசுவேன் என்று சொன்னார்.

எனவே ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டு விட்டு, அப்போதே அதற்கு மாறாக இலங்கை அதிபர் பேசினார். 27-8-1983ல் சென்னையில் நடைபெற்ற திமுக பொதுக் குழுவில் விடுதலை பெற்ற தனி தமிழ் ஈழம் தான் இதற்கு நிரந்தர பரிகாரம் என்று இந்த தீர்மானத்தை நிறைவேற்றினோம்.
தனித் தமிழ் ஈழம் என்பது வரலாற்று ரீதியாக தமிழர்களுக்கு வழங்கப்பட வேண்டிய உரிமையாகும். ஏழாயிரம் ஆண்டுகளுக்கு முன் இலங்கையும், தமிழ் நாடும் ஒரே நிலப்பகுதியாக இருந்தன என்ற உண் மையினை பல ஆராய்ச்சியாளர்கள் நிரூபித்துள்ளனர். இலங்கை, கடலால் பிரிக்கப்படுவதற்கு முன்பு வாழ்ந்த மக்களின் வழித்தோன்றல்களே ஈழத் தமிழர்கள் ஆவர்.

தனித் தமிழ் ஈழம் எனும் விடுதலை கீதம் தரணியெங்கும் வாழும் தமிழர்களின் செவிகளிலே இடையறாது ஒலித்துக் கொண்டிருக்கின்றது. இலங்கை மண்ணில் தமிழர்கள் சிந்திய ரத்தமும், கொடுத்த உயிர்ப் பலிகளும், நிச்சயம் வீண் போகாது. இன்றில்லாவிட்டால் நாளை, நாளை இல்லா விட்டால் நாளை மறுநாள் தனித் தமிழ் ஈழம் நிச்சயம் உருவாகும். ஈழத் தமிழினத்தின் இணையற்ற அடையாளம் குன்றின் மேலிட்ட விளக்காக குவலயத்திலே ஒளி வீசும்.
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

Exit mobile version