கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன் விநாயகமூர்த்தி மற்றும் சிறீதரன் ஆகியோரே கொழும்பு மத்திய சிறைக்கு நேரில் சென்று தமிழ் அரசியல் கைதிகளை சந்தித்து பேச்சுக்களை நடத்தினர்.
அரச அமைச்சரான நிமால் சிறீபால டி சில்வாவினது உறுதி மொழியை கருத்தில் கொண்டும் அரசிற்கான கால அவகாசமொன்றை வழங்குவதற்காகவும் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
தேசியக் கூட்டமைப்பு தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரத்தைப் பயன்படுத்தி ஏனைய சமூகங்களுடன் இணைந்து எழுச்சியை ஏற்படுத்துவதற்குப் பதிலாக தமது தரகு முதலாளித்துவ எஜமானர்களுடன் சமரசம் செய்து கொள்கிறது.