Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தமிழ் அடிமைகளை உருவாக்கிய பிரித்தானியாவின் இளவரசர் சார்ள்ஸ் சலனமின்றிச் சுவைக்கிறார்

தமது அடிமைகளின் தேனீர் அல்ல இரத்தம்
தமது அடிமைகளின் தேனீர் அல்ல இரத்தம்

பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்வதற்கு வருகைதந்திருந்த இளவரசர் சார்ள்ஸ் 16 ஆம் திகதி சனிக்கிழமை நுவரெலியாவுக்கு விஜயம் செய்து பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டதுடன் லபுக்கலை தேயிலை தொழிற்சாலையையும் சார்ள்ஸ் பார்வையிட்டதுடன் அந்த தொழிற்சாலையில் அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகத் தையும் திறந்து வைத்தார்.
இந்த தோட்டத்திற்கு பிரித்தானிய மகாராணி 1954 ஆம் விஜயம் செய்திருந்தார். நுவரெலியாவில் அமைந்துள்ள விசேட தேவையுடையவர்களுக்கான பாடசாலைக்கும் சென்றுள்ள சார்ள்ஸ் அந்த சிறுவர்களுடன் சிறிது நேரம் செலவு செய்ததுடன் இளவரசர் சார்ள்ஸ் மற்றும் அவரது மனைவி இளவரசி கமிலா ஆகியோர் லபுக்கலை அருகில் உள்ள தேயிலைத் தோட்டத்தை பார்வையிட்டார்.
தமிழ் நாட்டிலிருந்து பிரித்தானிய காலனிய அரசால் அடிமைகளாகப் பிடித்துவரப்பட்ட மலையக மக்கள் இந்த நூற்றாண்டிலும் அடிமைகளாகவே நடத்தப்படுகின்றனர். மலையக மக்கள் பிரித்தானிய அரசின் வாழும் சாட்சியான அவமானச் சின்னம். இலங்கையின் சனத்தொகையில் நான்கு வீதத்திற்கு சற்று அதிகமான மலையகத் தமிழர்கள் இலங்கையின் பொருளாதாரத்தின் முதுகெலும்பு.

தமிழ் நாட்டிலிருந்து புலம் பெயர் தமிழர்களுக்காக ‘தேசியப் பூசை’ செய்யும் ‘தமிழ் உணர்வாளர்களுக்கும்’ இலங்கையில் அடிமைகளாக நடத்தப்படும் மலையக மக்கள் தமிழர்களாகத் தெரிவதில்லை.

மேலும்:

பரதேசிகளைப் காண வந்த இளவரசர் சார்ல்ஸ் – என்.சரவணன்

 

Exit mobile version