‘தமிழர்களுக்காகப் போரடும்’ புலம் பெயர் அமைப்புக்கள் இனச்சுத்திகரிப்புப் போன்று அழிக்கப்படும் அகதிகள் குறித்து புலம்பெயர் நாடுகளுக்குத் தேசியச் சுற்றுலாச் செல்லும் யாரையும் கேட்டதில்லை.
இன்று தமிழ் அகதிகளை கைதிகளாகவும் அனாதைகளாகவும் குடியுரிமையற்றவர்களாகவும் அழிக்கும் செயற்பாடு இனச்சுத்திகரிப்பின் ஒரு பகுதியாகும்.
தமிழ் நாட்டில், இலங்கை இனப்படுகொலை அரசின் கோரப்பிடியிலிருந்து தப்பித்து சென்னைக்குச் சென்ற இரு தமிழ் இளஞர்கள் இரண்டு வருடங்களின் பின்னர் கடந்தவாரம் சென்னைக் காவல்துறையால் கைதாகினர் எனத் தகவல்கள் வெளியாகின.
உலகம் முழுவதும் அவலத்திற்கு உள்ளாக்கப்படும் ஈழத் தமிழர்களின் கண்ணீரை காசாக்கிக் கொள்ளும் மேட்டுக்குடித் தமிழர்கள் இலங்கை அரசின் இனச் சுத்திகரிப்பிற்கு ஒப்பான செயலை செய்துமுடிக்கின்றனர். தமது பிழைப்பிற்காக ஒப்பாரிவைக்கும் இவர்கள் இலங்கைப் பாசிச அரசின் நண்பர்களே. இந்திய அரசு, தமிழ் நாட்டு அரசு, உலகின் அழிக்கும் அதிகாரவர்க்கங்கள் ஆகியோரோடு கூட்டுவைத்துக்கொள்ளும் இவர்கள் இவற்றினூடாகத் தமது வியாபாரத்தை நடத்துகின்றனர். இலங்கையிலுள்ள ஜனநாயக முற்போக்கு சக்திகள் இவர்களை முற்றாக நிராகரிப்பதும், ராஜபக்ச அரசிற்கு எதிரன போராட்ட அமைப்புக்களை புதிய அரசியல் வழிமுறைகளில் காலம்தாழ்த்தாது கட்டியெழுப்புவதும் இன்றைய கடமையாகும். அவ்வாறான அமைப்புப் பலம்பெறும் போது மட்டுமே ஏகாதிபத்திய உளவாளிகளும், மகிந்த அரசின் அடியாட்களும் செயலற்றுப் போக வாய்ப்புக்கள் உள்ளன.