நாளை மறுதினம் லண்டன் UNHCR அலுவலகத்தின் முன்னால் ஆர்ப்பாட்டம் ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் சிதறி அவலத்துள் வாழும் தமிழ் அகதிகளுக்காக 1951 ஜெனீவா ஒப்பந்தத்தைப் பாதுகாப்பதற்கான அகதிகளுக்கான போராட்டக் குழுவினர் இப் போராட்டத்தை ஒழுங்கு செய்துள்ளனர். புலம் பெயர் தமிழ் சமூக ஆர்வலர்கள், இளஞர்கள் இனியொரு இணையத்தின் ஆதரவோடு இப் போராட்டத்தை ஒழுங்கு செய்துள்ளனர்.
ஜெனீவா ஒப்பந்தத்தின் அடிப்படையில் அகதிகளைப் பாதுகாக்கக் கூடிய சூழல் இருந்தும் அவர்கள் இலங்கை அரசிற்கு ஒத்துழைக்கும் வகையில் இலங்கைக்குத் திருப்பியனுப்ப UNHCR அனுமதிக்கிறது. இலங்கையில் ஐ.நா சொல்வது போல போர்க்குற்ற்வாளிகளும், அவரகளின் அரச இயந்திரமும் ஆட்சியிலுள்ளன. அவர்கள் முழுமையாக அகற்றப்படும் வரை மனிதாபிமான அடிப்படையில் அகதிகள் தாங்கள் விரும்பும் நாடுகளில் வாழ அனுமதிக்கப்பட வேண்டும் போன்ற சுலோகங்களுடன் இப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
அனைவரும் திரளாகப் பங்குபற்றி தமிழ் அகதிகள் அனாதைகள் அல்ல என்பதை உறுதிப்படுத்துமாறு போராட்டக்குழுவினர் கேட்டுக்கொள்கின்றனர்.