Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தமிழ் அகதிகள் அனாதைகள் அல்ல! : பொதுக்கூட்டம்- 28.06.2014

refugeeஐரோப்பிய நாடுகளிலும், ஆபிரிக்க நாடுகள் முதல்பெயர் தெரியாத சிறிய தீவுகள் வரையும் உலகம் முழுவதும் தமிழ் அகதிகள் அவலத்துள் வாழ்கின்றனர். அவர்கள் எப்போதும் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்படலாம் என்ற அச்சத்தில் காலத்தால் கொலை செய்யப்பட்டுகொண்டிருக்கின்றனர்.
ஐக்கிய நாடுகள் சபை இலங்கை அரசாங்கத்தைப் போர்க்குற்றவாளிகளின் அரசாங்கம் எனக் கூறுகிறது. உலகத்தின் கிரிமினல் அரசுகளில் ஒன்றான இலங்கை அரசை நோக்கி அகதிகளைத் திருப்பியனுப்ப அனுமதிக்கக்க்கூடாது!
ஐ.நா இலங்கை அரச போர்க்குற்றவாளிகளைத் தண்டித்து இனக்கொலை இராணுவத்தையும் போலிசையும் கலைக்கவேண்டும். அதுவரைக்கும் தமிழ் அகதிகளைத் திருப்பி அனுப்பக்கூடாது. இக் கோரிக்கைகளை முன்வைத்து ஐநா இன் அகதிகளுக்கான நிறுவனமான முன்னிலையில் தமிழ் அகதிகளுக்கான போராட்டக் குழுவினால் போராட்டம் ஒன்று நடத்தப்பட்டது. வெறும் ஆர்ப்பாட்டங்கள் மட்டுமே பலன்களைத் தந்துவிடாது. ஆக இதன் தொடர்ச்சியான திட்டங்கள் முன்வைக்கப்பட வேண்டும்.

அடுத்தகட்ட நடவடிக்கை குறித்த திட்டத்தை முன்வைப்பதற்காக பொதுக்கூட்டம் ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
Shiraz Mirza Community Hall, 76A Coombe Road, Norbiton, Kingston Upon Thames. KT2 7AZ tel: Tel: 07969925882 -நோர்பிட்டன் ரயில் நிலையத்திற்கு அருகாமையில்-
காலம்: 28.06.2014
நேரம் : மாலை 5:30 மணி முதல் 8:30 வரை
இரவு உணவு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

Exit mobile version