Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தமிழ் அகதிகளை அழிப்பதற்குத் துணை செல்லும் ஐ.நாவும் UNHCR உம்

போர் முடிந்து ஐந்து ஆண்டுகளாக தமிழ்ப் பேசும் மக்களின் அனைத்து அரசியல் மற்றும் எதிர்ப்பு ஒழுங்கமைப்புச் செயற்பாடுகளையும் தடுத்து தானே இலங்கை அரசைத் தண்டிக்கப் போவதாகக் கூறிவரும் ஐக்கிய நாடுகள் சபையும் அதன் உப உறுப்புக்களும் இலங்கை அரசின் இனச் சுத்திகரிப்பைத் துரிதப்படுத்தியுள்ளன.

2009 ஆம் ஆண்டு இலங்கை அரசுடன் இணைந்து தடுப்பு முகாம்களை நிறுவிய அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் முகவர் நிலையம் UNHCR அங்கிருந்து காணாமல் போன ஆயிரக்கணக்கானவர்கள் குறித்து எந்தப் பதிலும் கூறவில்லை.

உலகம் முழுவதும் வாழும் தமிழ் அரசியல் தலைமைகளோ ஐக்கிய நாடுகள் தண்டிக்கும் என மக்களுக்கு உண்மையை மறைக்கின்றனர். இந்த நிலையில் ஐக்கிய நாடுகள் சபை இலங்கை அரசின் இனச் சுத்திகரிப்பிற்குத் துணை செல்கின்றது என்பது வெளிப்படையானது.

உலகம் முழுவதும் வாழ்கின்ற தமிழ் அகதிகள் UNHCR இல் தம்மைப் பதிவு செய்துவிட்டு ஐந்து வருடங்களாகக் காத்திருக்கின்றனர். சிலர் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்படுகின்றனர். ஐக்கிய நாடுகள் நிறுவனம் இலங்கை அரசு போர்க்குற்றங்களை இழைக்கின்றது என்று கூறும் அதே வேளை அதனைத் தண்டிப்பதற்கான எந்த நடவடிக்கையும் முன்னெடுக்கவில்லை. இந்த நிலையில் அகதிகளை இலங்கையை நோக்கித் திருப்பி அனுப்ப்பும் நடவடிக்கை UNHCR இன் அனுமதியுடனேயே ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version