தேசியத்தின் பெயரால் நடத்தப்படும் அப்பட்டமான வியாபாரத்தை புலம்பெயர் தமிழர்கள் புரிந்துகொள்ள ஆரம்பித்திருப்பதற்கான அறிகுறியாகவே இப் புறக்கணிப்புக் கருதப்படுகின்றது. லைக்கா, லெபாரா ஆகிய தமிழ்ப் பல்தேசிய நிறுவனங்களால் ஊட்டி வளர்க்கப்படும் பணவெறி கொண்ட புலம்பெயர் பிழைப்புவாத அரசியலின் தோல்வியே இந்த நிகழ்ச்சியின் தோல்வி.
லைக்கா நிறுவனத்தின் இலங்கை அரசுடனான தொடர்பு இனியொரு இணையத்தினால் பலதடவைகள் தெளிவுபடுத்தப்பட்டன. இதனைப் பயன்படுத்திக்கொண்ட தமிழ்த் தேசிய வியாபாரிகள் லைக்காவின் போட்டி நிறுவனமான லெபாராவுடன் இணைந்து தமது பணவெறியைத் தீர்துக்கொண்டனர். இந்த பல்தேசியப் பண வெறிக்குள் சங்கதி,ஈழமுரசு,தமிழ்வின் ஆகியனவும் அடங்கிப் போயின.
தொலைக்காட்சி, வானொலி, கலைநிகழ்ச்சிகள் போன்ற அனைத்துத் தளத்தையும் களியாட்டமாக மாற்றுவதற்குத் பிழைப்புவாதிகளும், இவ்விரு வியாபார நிறுவனங்களும் திட்டமிட்டுச் செயற்படுகின்றனர்.
சில காலங்களின் முன்னர் சுப்பர் சிங்கர் என்ற தென்னிந்தியத் தொலைக்காட்சி நிகழ்ச்சியை இலங்கையில் நடத்தக்கூடாது என்று கொந்தளித்தவர்கள் பலர். ‘தமிழ்த் தேசிய’ வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கும்
இலங்கை அரச படைகளும், இந்திய உளவுத்துறையும் இணைந்து ஏற்படுத்த முடியாத அப்பட்டமான அழிவுகளை இக்கலாச்சார சீர்குலைப்பு ஏற்படுத்தும் வலிமை கொண்டது. அரைத் தமிழ்த் தொலைக்காட்சியான விஜய் தன்னைத் தமிழ்க் கலாச்சாரம் என்று அறிமுகப்படுத்திக்கொண்டு ஒவ்வொரு புலம்பெயர் குடும்பத்தினதும் வரவேற்பறையில் வந்து நிற்கிறது.
விஜய் தொலைக்காட்சி தனது கட்டண சேவையைப் புலம்பெயர் நாடுகளில் ஆரம்பித்துள்ளது. நாளாந்த செய்திகளைக்கூட வெளியிடாத அருவருக்கத்தக்க அரைகுறை ஆங்கிலத்தோடு தமிழையும் கலந்து நடத்தப்படும் நிகழ்ச்சிகளோடு விஜய் தொலைக்காட்சி புலம்பெயர் நாடுகளில் விசம் போலப் படர ஆரம்பித்துள்ளது. இதன் முன்னுரையாகவே, தமிழ்வின், லெபாரா, விஜய் இணைந்த நிகழ்வு நடத்தப்பட்டது.
வடக்கிலும் கிழக்கிலும் ஒடுக்கப்படும் தமிழர்கள் தமது வாழ்வின் அவலங்களை கலைவடிவங்களாக்கி வருகின்றனர். புலம்பெயர் நாடுகளின் தேசியப் பிழைப்பு வாதிகளோ தென்னிந்திய விதேசிக் கூத்தாடிகளின் களியாட்டங்களை இறக்குமதி செய்கின்றனர்.
லண்டனில் ஸ்டார் விஜய் நைட் : தேச விரோதிகளின் பண்பாட்டு அழிப்பு : சுதர்சன்