Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தமிழ்ப் பேசும் முஸ்லிம்களை அழிக்க ஆரம்பித்திருக்கும் பேரினவாதப் பயங்கரவாதிகள்

இலங்கையில் முஸ்லிம்களுக்கான ஹலால் முத்திரை பொறிக்கப்பட்ட உணவுப் பொருட்களைப் புறக்கணிக்க வேண்டுமென்று வலியுறுத்தி இரத்தினபுரி மாவட்டத்தில் எம்பிலிபிட்டிய நகரில் நேற்று திங்கட்கிழமை பௌத்த பிக்குகள் பெருமளவில் கலந்துகொண்ட ஆர்ப்பாட்டமொன்று நடந்துள்ளது.
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஜாதிக ஹெல உறுமய கட்சியின் உறுப்பினர்கள் பலரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.
இதே வேளை, முஸ்லிம்களுக்கு எதிராக ஒட்டப்படும் போஸ்டர்களை உடனடியாக கழட்டுவதட்கு நான் நடவடிக்கை எடுத்துள்ளேன் . அதே வேலை முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்படும் ஆர்ப்பாட்ட பேரணிகளையோ ஆர்ப்பாட்டங்களையோ தடுக்க முடியாது.
அவ்வாறு தடுப்பது ஜனநாயக விரோத செயற்பாடாக உள்ளதால் அரசாங்கத்தை அது நெருக்கடிக்கு உள்ளாக்கும். முஸ்லிகளாகிய நீங்கள் உங்கள் தரப்பு நியாயங்களை எம்மிடம் முன் வைப்பது போல் அவர்களும் பலவிடயங்களை சுட்டிக்காட்டி எமக்கு பல அழுத்தங்களை பிரயோகிக்கின்றார்கள்.
என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஸ அவரது அமைச்சு காரியாலயத்தில் நடைபெற்ற முஸ்லிம் பிரமுகர்களினுடனான சந்திப்பின் போது தெரிவித்தார்.
எம்பிலிபிட்டியவில் நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தை தமது கட்சி ஏற்பாடு செய்யவில்லை என்றபோதிலும் அதில் தமது கட்சியின் உறுப்பினர்கள் வெவ்வேறு அமைப்புகளை பிரதிநிதித்துவப் படுத்தி கலந்துகொண்டிருக்கலாம் என்று ஜாதிக ஹெல உறுமய கட்சியின் மேல்மாகாண சபை அமைச்சர் உதய கம்மன்பில பிபிசியிடம் கூறினார்.
ஹலால் சான்றிதழ் பெற வேண்டுமென்று வர்த்தக நிறுவனங்களை முஸ்லிம்கள் தரப்பிலிருந்து பலவந்தப்படுத்துகின்ற போக்குக்கு தமது கட்சி எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
முஸ்லிம்களுக்கு ஹலால் உணவு உண்பதற்கு உரிமை இருப்பது போல ஹலால் இல்லாத உணவை உண்பதற்கான உரிமை மற்ற மதத்தவர்களுக்கு உண்டு என்றும் அமைச்சர் உதய கம்மன்பில வாதிட்டார்.
அதேவேளை, நாட்டில் பௌத்த விகாரைகளுக்கு அருகில் ‘உரிய அனுமதியின்றி நிர்மானிக்கப்பட்டுள்ள முஸ்லிம் பள்ளிவாசல்கள் சட்டவிரோதமானவை’ என்றும் அவற்றை அகற்ற வேண்டுமென்றே தாம் போராட்டம் நடத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.

Exit mobile version