Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தமிழ்ப் பேசும் மக்களின் சுய நிர்ணைய உரிமையை முன்வைத்து பிளவடையும் ஜே.வி.பியின் முற்போக்கு அணியினர்.

மக்கள் விடுதலை முன்னணி-ஜனதா விமுக்தி பெரமுன- என்ற ஜே.வி.பியில் தமிழ்ப் பேசும் சிறுபான்மையினரின் தேசிய இனப்பிரச்சனையையும் ஏனைய சமூகப் பிரச்சனைகளையும் முன்வைத்துப் பிளவு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக தமிழ்ப் பேசும் மக்கள் மத்தியில் வடக்கிலும் கிழக்கிலும் அரசியல் வேலையில் ஈடுபட்டவர்களின் கருத்த்துக்களை முன்வைத்தே கட்சியில் விவாதங்கள் உருவாகின. இன்று இனியொருவுடன் பேசிய பிளவுற்ற பிரிவைச் சேர்ந்த உதுல் பிரேமரட்ன தமிழ்ப் பேசும் மக்களின் சுய நிர்ணய உரிமைக்காக இடதுசாரிகள் குரல்கொடுக்கத் தவறிவிட்டதை சுய விமர்சனமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றார். தவிர, தான் தமிழர் பிரச்சனை குறித்துத்  எழுதிய கட்டுரைகள் பல உட்கட்சி விவாதத்தில் குறித்த தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும் குறிப்பிட்டார்.

உதுல் பிரேமரட்னவின் கட்டுரைகள் இனியொருவிலும் மொழிபெயர்ப்பாக வெளிவந்தமை குறிப்பிடத்தக்கது.

உதுலின் கட்டுரைகள்:

திருமகள்இன்னும்விடுதலைப்புலிசந்தேகநபர் : உதுல்பிரேமரத்ன

https://inioru.com/?p=22168

விஜிதாவுக்குநடக்கவிருப்பதுஎன்ன? : உதுல்ப்ரேமரத்ன

https://inioru.com/?p=21953

தமிழ்அரசியல்கைதிகள்நிர்வாணப்படுத்திகேவலப்படுத்தப்படுகிறார்கள் : உந்துல்பிரேமரட்ன

https://inioru.com/?p=21862

யுத்தம்முடிவுற்றுஇரண்டுவருடங்கள் : உதுல்ப்ரேமரத்ன

https://inioru.com/?p=21459

Exit mobile version